அய்.நா. தரும் ஒப்புதல் வாக்குமூலம்
[பல்வேறு செய்தி ஏடுகளில் புதைந்து கிடக்கும் செய்திகள், சிந்தனைகளைத் தேடிப் பிடித்து வாசகர்களின் சிந்தனைக்கு தொகுப்பாக முன் வைக்கப்படுகிறது.] ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் ஒன்றிரண்டு ஆங்கில இதழ்களோடு நின்று போன ஒரு முக்கிய செய்தி இது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அய்.நா. எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வந்தது என்ற குற்றச்சாட்டை இப்போது அய்.நா.வே ஒப்புக் கொண்டுள்ளது. அய்.நா.வில் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன், அவரது ஆலாசகர் என்ற பொறுப்பில் இருந்த விஜய் நம்பியார் என்ற இந்தியாவைச் சார்ந்த மலையாள அதிகாரி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அய்.நா.வின் பல்வேறு பிரிவுகள் இனப் படுகொலையின்போது மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை செய்ய விடாமல் முடக்கினார். இது குறித்த விரிவான தகவலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருக்கிறது. அவ்வளவும் உண்மைதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் அய்.நா.வின் அமைப்புகள் தங்கள்...