Tagged: அணுக்கழிவு

இரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சுப. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை. கூடங்குளத்தில் இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிற நிலையில், கூடங்குளம் அணுத்திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பான எங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அடுத்தக் கட்டத் திட்டங்களையும் இங்கே பதிவு செய்கிறோம். தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாது காப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும் தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும்,...