முடிவை மாற்ற வேண்டாம்
டாக்டர் அம்பேத்காருக்கு ராமசாமி தந்தி
தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பின்வரும் தந்தி அடித்துள்ளார்.
தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன்.
தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லக்ஷம் பேரையாவது மதமாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜனமாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்.
குடி அரசு வேண்டுகோள் 20.10.1935