சென்னை கலாசாலைகளில்

 

பார்ப்பனராதிக்கம்

சென்னையிலுள்ள  உயர்தரக்  கலா சாலைகளான  தொண்டை  மண்டலம்  துலுவ  வேளாளர்  உயர்தரக்  கலாசாலை,  இந்து  தியாலாஜிகல்  ஹைஸ்கூல்,  பச்சையப்பன்  கல்லூரி  முதலியவிடங்களில்  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாத  உத்தியோகஸ்தர்களின்  எண்ணிக்கை  வருமாறு;

தொண்டமண்டலம்  துலுவ வேளாளர்  உயர்தர  கலாசாலை

தலைமை  உபாத்தியாயர்  பார்ப்பனர்.  பி.ஏ.எல்.டி. பாஸ்  செய்த  உபாத்தியாயர்  13ல்  12  பார்ப்பனர்,  1  பார்ப்பனரல்லாதார்,  சக்கண்டரி  கிரேட்  பாஸ்  செய்த  உபாத்தியாயர்  27ல்  22 பார்ப்பனர்,  5 பார்ப்பன ரல்லாதார்கள்.  பண்டிதர்கள்  7ல்  3  பார்ப்பனர்,  4  பார்ப்பனரல்லாதார்,  டிரில்,  டிராயிங்  உபாத்தியாயர்கள்  4ல்  2  பார்ப்பனர்,  2  பார்ப்பனரல்லாதார்.  இங்கு மொத்தம் 52 உத்தியோகஸ்தர்களில் 40 பார்ப்பனர் 12  பார்ப்பனரல்லாதார்.

இந்து  தியாலாஜிக்கல்  ஹைஸ்கூல்

தலைமை  உபாத்தியாயர்  பார்ப்பனர்.  பி.ஏ.எல்.டி.  பாஸ்  செய்த  உதவி  உபாத்தியாயர்கள்  14ல்  13 பார்ப்பனர்,  ஒரு  பார்ப்பனரல்லாதார்,  சகண்டரிகிரேட்  டிரெயினிங்  பாஸ்செய்த  உபாத்தியாயர்களில்  19ல்  15  பார்ப்பனர்,  4 பார்ப்பனரல்லாதார்,  பண்டிதர்கள்  6ல்  5  பார்ப்பனர்,  ஒரு  பார்ப்பனரல்லாதார்,  டிராயிங்,  டிரில்,  கமர்சியல்  உபாத்தியாயர்கள்  3ல்  2  பார்ப்பனர்,  1  பார்ப்பனரல்லாதார்,  கிளார்க்குகள்  3ல்  3ம்  பார்ப்பனர்கள்;  இங்கு  ஆக  மொத்தம்  46ல்  39  பார்ப்பனர்,  17  பார்ப்பனரல்லாதார்.

பச்சையப்பன் கல்லூரி

தலைமை  உபாத்தியாயர்  பார்ப்பனர்.  பி.ஏ.எல்.டி.  பாஸ்  செய்த  உதவி  உபாத்தியாயர்கள்  16ல்  10  பார்ப்பனர்கள்,  6  பார்ப்பனரல்லாதார்கள்,  பண்டிதர்கள்  6ல்  3  பார்ப்பனர்,  3  பார்ப்பனரல்லாதார்,  டிராயிங்,  டிரில்,  கமர்சியல்  உபாத்தியாயர்  7ல்  3  பார்ப்பனர்,  4  பார்ப்பனரல்லாதார்.  இங்கு  மொத்தம்  30ல்  17  பார்ப்பனர்கள்,  13  பார்ப்பனரல்லாதார்கள்.

முத்தியாலுப்பேட்டை  உயர்தரக்  கலாசாலை

தலைமை  ஆசிரியர்  பார்ப்பனரல்லாதார்.  பி.ஏ.எல்.டி.  பாஸ்  செய்த  உதவி  ஆசிரியர்கள்  17ல்  12  பார்ப்பனர்,  5  பார்ப்பனரல்லாதார்,  செக்கண்டரி  கிரேட்  பாஸ்  செய்த  உபாத்தியாயர்கள்  18ல்  15  பார்ப்பனர்கள்,  3  பார்ப்பனரல்லாதார்.  பண்டிதர்கள்  11ல்  4  பார்ப்பனர்,  7 பார்ப்பன ரல்லாதார்.  டிராயிங்,  டிரில்,  கமர்சியல்  டிரில்  உபாத்தியாயர்கள்  5ம் பார்ப்பனரல்லாதார்கள். கிளார்க்குகள் 5ல் 3 பார்ப்பனர்கள், 2  பார்ப்பனரல்லாதார்கள்.  இதில் மொத்தம்  57ல்  34 பார்ப்பனர்கள்,  23  பார்ப்பனரல்லாதார்.

பத்திராதிபர்  குறிப்பு :

இப்பள்ளிக்கூடங்கள்  சர்க்காரால்  அனுமதிக்கப்பட்டது  என்பதுடன்  சர்க்காருடைய  உதவித்  துகையும்  பெறக்கூடியதாய்  இருந்தால்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவப்படி  உபாத்தியாயர்களை  ஏற்படுத்த  வேண்டுமென்று  கட்டாயப் படுத்த சர்க்காருக்கு உரிமை  உண்டு  என்றும்  அவற்றை  இதுவரை  கல்வி  மந்திரி  கையாளாமல்  இருப்பது  ஒரு  பயங்காளிதனமென்றோ  அல்லது  கவலையற்ற  தன்மை  என்றோ  சொல்லாமல்  இருக்க  முடியவில்லை.  அன்றியும்  பச்சியப்பா  கலாசாலையின்  மெம்பர்கள்  பெரும்பாலும்  பார்ப்பனரல்லாதார்  சமூகத்தையும்  அதை  ஆதரிக்கும்  கட்சிப்  பிரமுகர்களாயிருந்தும்  பார்ப்பன  உபாத்தியாயர்கள்  17ம் பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் 13ம் என்று ஏற்படுத்தி  இருக்குமானால்,  பார்ப்பனரல்லாதார்  முன்னேற்ற  விஷயத்தில்  எவ்வளவு  அக்கரை  காட்டி  வருகிறார்கள்  என்பதை  குறிப்பிட  மிகவும்  வருந்துகிறோம்.

குடி அரசு  பத்திராதிபர்  குறிப்பு  18.08.1935

You may also like...