புதிய

 

“”தேசத் துரோகிகள்”

நேற்று வரை காங்கிரசின் சர்வாதிகாரியாய் இருந்த தோழர் ராஜேந்திர பிரசாத்திடம் சார்ஜ் ஒப்புக் கொடுத்த தோழர் ஆனே அவர்கள் இன்று தேசத் துரோகக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டார். அதாவது ஜயகருடன் சேர்ந்து விட்டாராம். அது மாத்திரமல்லாமல் ஆனே அவர்கள் வைசிராய் பிரபுவின் விருந்துக்குச் சென்று விட்டாராம். கடைசியாக ஒத்துழைக்கவும் போகிறாராம். இந்தக் காரணங்களால் அவர் தேசத் துரோகியாகி விட்டார்.

தேசத் துரோகிகளுக்கு சன்னதுகள் நமது காங்கிரஸ்காரர்களிடம் தான் இருக்கிறது போலும். காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் சென்று உத்தியோகம் ஏற்று சீர்திருத்தங்களை நடத்திக் கொடுப்பது என்பது ஒத்துழைப்பு அல்லவாம். சரணாகதி அல்லவாம். ஏனெனில் ஒத்துழைப்புக்கு அர்த்தம் சொல்லும் அகராதி காங்கிரஸ்காரர்களுடையது. அதிலும் சென்னைப் பார்ப்பனர்களுடையவும், அவர்களுடைய பத்திரிகைகளுடையவும் அவர்களது கூலிகளுடையதுமாய் இருப்பதால் அவர்கள் பார்த்து எதை வேண்டுமானாலும் ஒத்துழைப்பு என்று சொல்லி விடலாம்  எதை வேண்டுமானாலும் ஒத்துழையாமை என்றும் சொல்லி விடலாம்.

ஆகவே தேசத் துரோகிகளுக்கு முத்திரை இடும் அதிகாரம் இப்போது அவர்களுடையதாகிவிட்டது போலும்.

குடி அரசு  செய்தி  விமர்சனம்  28.04.1935

You may also like...