எல்லாம்  ஒன்றே

 

இந்தியாவில்  4  கோடி  வேலையில்லாதார்

முடி  அரசாகிய  பிரிட்டிஷ்  ராஜ்யத்தில்  70  ஆயிரம்  பேர்கள்  வேலை  இல்லாமல்  திண்டாடுகிறார்கள்.  குடி  அரசாகிய  அமெரிக்காவில்  2  கோடி  பேர்கள்  வேலை  இல்லாமல்  திண்டாடுகிறார்கள்.

வேற்றரசு  ஆகிய  இந்தியாவில்  4  கோடி  பேர்கள்  வேலையில்லாமல்  திண்டாடுகிறார்கள்.

ஆகவே  ஜன  எண்ணிக்கைப்படி  கணக்குப்  பார்த்தால்  விகிதாச்சாரத்தில்  ஒன்றும்  மோசமாக  இல்லை.  சற்றேரக்குறைய  சரியாகத்தானிருக்கின்றது.  ஆகவே  வேலை  இல்லாத  காரணத்துக்கு  முதலாளி  அரசு  காரணமே  ஒழிய,  முடி  அரசோ,  வேற்றரசோ  காரணம்  அல்ல  என்பதை  உணர  வேண்டுகிறோம்.

குடி அரசு  கட்டுரை  30.06.1935

You may also like...