நீடாமங்கலத்தில்  சுயமரியாதைத்  திருமணம்

 

சுயமரியாதைத் திருமணம் என்பது  சீர்திருத்தத் திருமணமே ஒழிய மற்றபடி வேறு அல்ல என்பதாக பல மேற்கோள்களுடன் சிறிது நேரம் பேசினார். அதில் 40 வருஷத்துக்கு முன்னால் நடந்த தனது திருமணமும் இந்த மாதிரி தன் தகப்பனாருக்கு இஷ்டமில்லாமல் நடந்ததாகவும் தனது மனைவியை மணக்க திருமணத்தின் போது தந்தை தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னதாகவும், அதனால் தந்தையார் சாப்பாடு இடத்திலேயே இருந்தாரே ஒழிய மணக் கொட்டகைக்கு வரவில்லை என்றும், மற்றபடி செலவு விஷயத்தில் அவர் ஏதும் குறுக்கிடவில்லை என்றும், ஐரோப்பியர் வந்தபோது மாத்திரம் வரவேற்க வந்ததைத் தவிர மற்றபடி எந்த காரியத்தையும் கவனிக்கவில்லை என்றும், பிறகு தன் மனைவி விஷயத்தில் தன் தகப்பனார் மிக பட்சமாக இருந்தார் என்றும் ஒவ்வொன்றுக்கும் மனைவிக்காக சிபார்சுக்கு வந்து தன்னைக் கண்டித்தாரென்றும் சொல்லி அதுபோலவே இப்போது மணமகன் தந்தையாருக்கு ஏதோ சிறிது அதிருப்தி இருந்தாலும் அது சீக்கிரம் சரிப்பட்டுப் போகும் என்றும் சொன்னார்.

குறிப்பு:            05.05.1935  ஆம்  நாள்  நீடாமங்கலத்தில்  நடைபெற்ற  தோழர்கள்  இரத்தினசபாபதி  தனலட்சுமி  ஆகியோர்  திருமணத்தில்  ஆற்றிய  உரையின்  சுருக்கம்.

குடி அரசு  சொற்பொழிவு  12.05.1935

You may also like...