கிருஷ்ணசாமி  ஜீவானந்தம் விடுதலை

 

நமது ஆசிரியர் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் மீதும் தோழர் பி. ஜீவானந்தம் அவர்கள் மீதும் தொடரப்பட்டு இருந்த ராஜத் துவேஷ வழக்கு முன் குறிப்பிட்டிருந்தபடி 18.3.35 ந் தேதியில் விசாரணை நடைபெறவில்லை. அன்று ஜில்லா மாஜிஸ்ரேட் அவர்கள் தான் இன்னும் வழக்கு சம்பந்தமான ரிக்கார்டுகள் முழுவதையும் படித்துப் பார்க்கவில்லை யென்று கூறி 23.3.35ந் தேதிக்கு வாயிதா போட்டிருந்தார்.

23.3.35ந் தேதியில் தோழர்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமியும் ஜீவானந்தமும் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததனால் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த ஸ்டேட்மெண்டில்,

“”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935

You may also like...