குடி அரசுக்கு நோட்டீ°

(1931-ம் வருஷத்திய இந்திய பத்திரிக்கைகள் (அவசர அதிகார) சட்டத்தின் 3-வது பிரிவினுடைய (3-வது) உட்பிரிவின்படி)

கோயமுத்தூர் ஜில்லா ஈரோட்டிலிருந்து பிரசுரிக்கப்படுகின்றதும் 1931ம் வருடத்திய இந்தியபத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டப்பிரிவு களின்படி செக்யூரிட்டி வாங்கப்படாததுமான, “குடி அரசு” என்ற பெய ருள்ள பத்திரி கையின் 1933 ஜுலை 30ம்தேதி இதழிலே 1932ம் வருஷத்திய கிரிமினல் சட்ட திருத்தச்சட்டத்தினால் (ஓஓகுஐ டிக 1932) திருத்தபெற்ற ³ சட்டத்தின் 4வது செக்ஷன், (1) சப்செக்ஷனின் (டி) பிரிவில் விவரிக்கப்பட்ட தன்மையுள்ள வார்த்தைகள் (அதன் இங்லீஷ் மொழிபெயர்ப்பு ஒன்று இத் துடன் அனுப்பப் பட்டிருக்கிறது) பிரசுரிக்கப்பட்டிருப்பதாக லோக்கல் கவர்ன்மெண்டுக்கு தெரியவருகிறபடியால் 1931ம் வருஷத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டம் (ஓஓஐஐஐ டிக 1931) 7-வது செக்ஷனில் (3) சப்செக்ஷனின்படி , ³ பத்திரிகையின் பிரசுரதாரராகிய எ°.இராமசாமி நாயக்கர் மனைவி எ°.ஆர். கண்ணம்மாள், 1933 நவம்பர் 20-ந் தேதி அல்லது அதற்கு முந்தி ரூ.1,000 (ஆயிரம் ரூபாய்) ரொக்க பணமாக அல்லது இந்திய கவர்ன்மெண்டு செக்யூரிட்டி பாண்டுகளாக கோயமுத்தூர் ஜில்லா மாஜி°டிரேட்டிடம் செக்கியூரிட்டி கட்டவேண்டும் என்று லோக்கல் கவர்ன்மெண்டார் இதனால் அறிவிக்கின்றனர்.

(கவுன்சிலின் கவர்னர் உத்திரவுப்படி) ஆக்டிங் சீப் செக்ரட்டரி.

“குடி அரசு” பத்திரிகை அச்சடிக்கப்படுகிற “உண்மைவிளக்கம்” அச்சுக்கூட சொந்தக்காரரான தோழர் கண்ணம்மாளுக்கு இவ்விதமாக ரூ.1,000 ஜாமீன் கேட்டு ஒரு நோட்டீசு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆக 2000 ரூபாய் ஜாமீன் கேட்கப்பட்டிருக்கிறது.

குடி அரசு – அறிக்கை – 12.11.1933

 

You may also like...