“”மனித  உற்பவம்”

 

இந்நூல்  செப்டம்பர்  முதலில்  வெளிவரும்.  தமிழ்  பாஷையிலும்,  மற்றும்  எந்த  இந்திய  பாஷையிலும்,  இதுகாரும்  எழுதிராத  நூல்  இதுவொன்றே.  இந்  நூல்  நாட்டில்  3035  கோடி  மக்களுக்கு,  மனிதன்  உலகில்  எவ்விதம்  உற்பத்தியானான்  என்ற  விஷயம்  தெரியாமலே  இருந்து  வருகிறது.  இந்தியாவில்,  தற்போது  வாழ்ந்து  வரும்  முதியோருக்கும்  இளைஞருக்கும்  மனிதன்  எவ்விதமாக  உலகில்  தோன்றி  இருக்கக்கூடுமென்று  சிந்திக்கக்  கூடாமலே  இருக்கின்றது.  ஏனெனில்  மதங்களாலும்,  ஜாதிகளாலும்  கட்டுண்ட  நமது  இந்திய  மக்களுக்கு,  எங்கே  மனித  உற்பவ  உண்மையைத்  தெரிந்துகொண்டால்,  மதங்கள்  பேரிலும்,  ஜாதிகள்  பேரிலும்  பற்று  ஒழிந்து  போகுமோ  என்ற  மோச  எண்ணத்தால்,  மனித  உற்பவத்தியைப்  பற்றி  விஞ்ஞானம்  கூறும்  உண்மையை,  நமது  பாமர  மக்களுக்கு  எடுத்துறைக்காமலே  இதுகாரும்  நமது  அறிஞர்களும்  இருந்து  வந்திருக்கின்றனர்.  இந்த  மோசடியைப்  போக்கவும்,  மதங்களிலுள்ள  பற்று  ஒழியவும்  ஏற்பட்டதாகும்  இந்நூல்.  இதனை  வாசித்து,  நமது  பாமர  மக்களுக்கு  மனிதனுடைய  உண்மை  வரலாற்றைத்  தெரிவிக்க,  ஒவ்வொரு  சமதர்மியும்,  சுயமரியாதையாரும்  கடமைப்பட்டுள்ளார்கள்.  இதில்  மனித  உற்பவம்,  பிரபஞ்ச  உற்பவம்,  மனித  பரம்பரை  முதலிய  அறிய  விஷயங்களை  படங்களுடன்  நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதன்  விலையை  சாமான்ய  மக்கள்  வாங்கிப்  படிக்குமாறு  குறைக்கப்பட்டுள்ளது.  மனிதன்  உலகில்  தோன்றி  சுமார்  5  லட்ச  வருஷமாயினும்  இவனது  பரம்பரை,  உலக  ஆரம்ப  முதல்  புல்லாய்,  பூண்டாய்,  புழுவாய்,  மீனாய்,  மிருகமாய்  மாறி  வந்து,  கடந்த  5  லட்ச  வருஷத்திற்கு  முன்பே  தனது  மனித  உருவத்தைப்  பெற்றுள்ளார்  என்ற  அறிய  மெஞ்ஞானத்தை  எடுத்துக்காட்டும்  இந்நூலொன்றே  தமிழ்  நாட்டில்  வரைந்துள்ளது.

பகுத்தறிவு  நூல் மதிப்புரை  02.09.1934

You may also like...