அருஞ்சொல் பொருள்
அசூயை – பொறாமை
அபேக்ஷித்தல் – விரும்புதல்
அமிதம் – அளவுக்கு அதிகமாக
அத்தாக்ஷி – உறுதியான சான்று
அபுரூமாக – அபூர்வமாக, அரிதாக
அநித்தியம் – நிலையற்றது
அவிழ்தம் – மருந்து, ஒளடதம்
ஆகுர்தி – உருவம், உடல்
ஆக்கினை – கட்டளை, ஆணை
ஆவாகனம் – எழுந்தருளுமாறு மந்திரத்தால் தெய்வத்தை வேண்டி அழைத்தல்
ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு
இத்தியாதி – இவை போன்ற
கடாக்ஷம் – கடைக்கண்
கிருத்துருவம் – வஞ்சனை
சகோதரம் – குலம்
சம்சயம் – அய்யம், சந்தேகம்
சம்ரக்ஷணை – காப்பாற்றுகை
சவதமாக – விலை மலிவாக
சிம்டா – சிட்டிகை, பெருவிரல் ஆட்காட்டி விரல் சேர்த்து எடுக்கும் அளவு
சுசி – தூய்மை
சுதாவில் – தன் விருப்பாய், தானாக
தயாபரத்துவம் – அன்புடைமை, அருளுடைமை
தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு
திருஷ்டாந்தம் – எடுத்துக்காட்டு
தொந்தம் – கட்டு, பந்தம், துயர்
நிர்பயமாய் – அச்சமின்றி
நிஷ்டூரம் – கொடுமை
நேர்ச்சை – நேர்த்திக் கடன்
பாதராவிந்தம் – பாதத் தாமரை, காலடி
பாலாரிஷ்டம் – குழந்தைப்பருவ தொடர் நோய்
பிராக்கு – இன்னொரு செய்தியில்
கவனத்தை செலுத்துதல்
மிரவணை – ஊர்வலம்
முறைதலை – நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் திருமணத்திற்கு முன்பும் பின்பும் பெரும்
பொருட்செலவில் செய்யப்படும்சடங்குகள்
மூளாவண்ணம் – விதண்டா வாதம், பிறர்கூறுவதை
மறுத்து தன்கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம்
மூலைவிதி – தலைவிதி
வர்த்தமானம் – நிகழ்காலம், தற்கால நிகழ்வுகள்
விதாயம் – முடிவு
யதாபிரியர்கள் – பழமைவாதிகள், மாற்றம் விரும்பாதோர்
ஜட்கா வண்டிக்காரர் – குதிரை வண்டிக்காரர், (பணமில்லாதவர்கள் )
3 ஆவது பாரம் – கூhசைன குடிசஅ, 8 ஆம் வகுப்பு