இது சொன்னது சுயமரியாதைக்காரரா?
சித்திரபுத்திரன்
“பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கடைத் தேறலாம் – சற்றேனும் ஏறுமாறாய் இருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னி யாசம் கொள்ளு”
என்று “நீதி நூல்கள்” முறையிடுகின்றன. இதைச் சொன்னது சுயமரியாதைக்காரர்களல்லவே. இப்பொழுது சுயமரியாதைக்காரர்கள் ஏறுமாறாய் இருக்கும் “விரதை”களை விட்டுவிட்டு சன்யாசம் கொள்ளு என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணை கொள்ளு. சன்னியாசம் கொள் ளாதே என்கிறார்கள். இதனால் புருஷனின் சன்யாசம் மாறிற்றேயொழிய பெண்ணின் விரதத்திற்கு யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. இதற்காக ஏன் சிவநேயர்கள் வேப்ப எண்ணை குடிக்க வேண்டும்?
குடி அரசு – விமர்சனம் – 14.12.1930