நவஜவான் தொண்டரும் தலைவரும்

நவஜவான் பாரத வீரர்கள் ‘காந்தி ஒழிக’ என்று சொல்லி தடுத்து நன்றாய் அடிப்பட்ட சேதி ஒரு பக்கம் இருக்க, நவஜவான் பாரத வீரர் சபை தலைவரான திரு. சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் திரு. காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போவதைப் பற்றி தங்களது திருப்தியையும் தாங்கள் திரு. காந்தியவர்களையே பின்பற்றி வருவதாகவும் உறுதிகூறி தந்தி அடித்திருக்கின்றார். (இது 29.8.31 தமிழ்நாட்டு பத்திரிகையில் இருக்கிறது.) இதிலிருந்து பாரத நவஜவான் சபை கொள்கைகளின் யோக்கியதையும் தலைவர்களின் யோக்கியதையும் விளங்குகின்றது.

நவஜவான் பாரத வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலிபர்கள் கவனிக்கத் தக்கதாகும்.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 06.09.1931

You may also like...

Leave a Reply