சம்பளக் குறைவு

மத்திய மாகாண அரசாங்க கல்வி மந்திரி உயர்தர வகுப்புப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சம்பளங்களை அதாவது ஹைஸ்கூல் பிள்ளை களுக்கு 8-ல் ஒரு பங்கும், கலாசாலை மாணவர்களுக்கு 3-ல் ஒரு பங்குமே குறைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் சொல்லும்போது “ஏழைக் குடியானவர்களுடையவும், தொழிலாளிகளுடையவும் பிள்ளைகள் படிப்பதற்கு இப்போதைய சம்பளம் மிக அதிகமாயிருப்பதால் அதை குறைத்து அவர்களுக்குச் சௌகரியம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குறைக்கப்படுகின்றது” என்று சொல்லி இருக்கிறார். இதை அந்தச் சர்க்காராரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அது இந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதலே அமுலுக்கு வரப்படுமாம்.

அந்தப்படி இங்கும் நமது கல்வி மந்திரி பிள்ளைகள் சம்பளத்தை ஏன் குறைக்கப்படாது என்பதற்குக் காரணம் நமக்குத் தெரியவில்லை.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.08.1931

You may also like...

Leave a Reply