தேவஸ்தான நிர்வாகத்திலும் பார்ப்பனீயம்

தஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார்களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம்! இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி எந்த தேசீய பத்திரிகையும் எழுதாமல்: “சைமனே திரும்பிப்போ, எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம்” என்கின்றன. சைமனை திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை. ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்று பிழைப்புக்கும் கூலிக்கும் சைமனை பஹிஷ்கரித்தால் மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பஹிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கிவிடுகின்றார்கள். ஐயோ பாவம்!

குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.03.1928

You may also like...

Leave a Reply