சூழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீ முதலியாருக்கு பல வரவேற்பு
களும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீ முதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்
கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா
மலைக்கு வராமல் இருக்கும்படி செய்யவேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் றேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கிவிட்டார்கள். நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும் கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் கிரமப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து
விட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்கு போதுமான காரணம் இல்லையென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார் களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய்விட்டது.

மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண்ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலியாரும் போவார் என்றே தெரிகின்றது.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 19.02.1928

You may also like...

Leave a Reply