சீர்திருத்தப் புரட்டு
நமது நாட்டுப் பார்ப்பனர்களின் பொதுநலச்சேவை, சீர்திருத்தம் என்ப வைகள் அதாவது காங்கிர° என்றும், சமூக சீர்திருத்தம் என்றும், ஆசாரச் சீர்திருத்தம் என்றும் இப்பார்ப்பனர்கள் பேசுவதெல்லாம் சுத்தப் புரட்டு என்றும் இவைகளை வேறொருவர் செய்வதற்கில்லாமல் ஏமாற்றி தாங்களே செய்பவர்கள் போல காட்டி மக்களை ஏமாற்றி வெறுந் தீர்மானங்களை ஏட்டில் எழுதிவிட்டு காரியத்தில் நடவடிக்கையில் வரும் போது குறுக்கே படுத்துக் கொண்டு விதண்டாவாதம் பேசுவதே வழக்கம் என்றும் எழுதி வந்திருக்கின்றோம்.
உதாரணமாக, ஆசார திருத்தத்தின் பேரால் பம்பாயில் போய் வயிறு பிழைக்கும் ஸ்ரீ மு. நடராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் இந்தியா முழுமைக் கும் தான் ஒரு ஆசாரத்திருத்தக்காரர் என்ற விளம்பரம் பெற்றவர்.. அவரது ஆசாரத் திருத்தமானது ஸ்ரீமான்கள் ஆ.மு.ஆச்சாரி. கூ.சு.ராமச்சந்திர ராவ்ளு.சத்தியமூர்த்தி முதலிய வருணாசிரம பிரசாரக்காரர்களைவிட மோச மான திருத்தம் என்றே சொல்லுவோம். உண்மையாய் பேசவேண்டுமானால் அவர் ஆசாரத்திருத்தம் என்கின்ற பெயரால் வருணாசிரமத்தை பரப்ப வந்த சூழ்ச்சிக்கார பார்ப்பனர் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் சுயமரியாதை இயக்கம் என்று ஒன்று தோன்றியிருப்பதும் மனுதர்ம சா°திரத்தைக் குற்றம் சொல்லி கொளுத்தியதும் இவருக்கு வெகு கஷ்டமாக போய்விட்டதாம். “மனுதர்மத்தைக் கொளுத்தியதாலேயே இந்தியாவின் பழைய தர்மம் என்ப தை அழித்துவிட முடியாது” என்று பந்தயங்கூறி மக்களை ஏய்ப்பதினா லும் சுயமரியாதை மகாநாடு என்பது கற்பனை மகாநாடு என்பதாக ஒன்று ஏற்படுத்துவதுபோல் அவ்வளவு கேவலமானது என்கிறார். கற்பில் லக்ஷியம் இல்லாத ஜாதிக்கும் சுயமரியாதையில் லக்ஷியம் இல்லாத ஜாதிக்கும் இப்படித் தோன்றுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. சன்மார்க்க சங்கம் என்றோ சன் மார்க்க மகாநாடு என்றோ ஒன்று கூட்டுவதானால் அவர்கள் சன்மார்க்க மற்றவர்கள் என்பதைக் காட்டத் தான் கூட்டுவார்கள் என்பது ஸ்ரீ நடராஜனின் கருத்துப்போலும். தவிர வைக்கம் சத்தியாக்கிரகத்தின்போது கூட இந்த பிரபு “ஆட்nக்ஷபிக்கப்பட்ட வீதியில் நடக்காமல் இருப்பதே ஆnக்ஷபித்தவர் களுக்கு தக்க தண்டனையாகும்” என்று உபதேசம் செய்தவர்.
தவிர, சமீபத்தில் கூடிய சென்னை ஆசாரத்திருத்த மகாநாட்டில் இவர் பேசிய பேச்சு பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவே சர்க்கரை பூசிய விஷம் போல் தந்திரமாய்ப் பேசினார். இதைப் போலவே மற்றும் பலர் பல சமயங் களில் பேசியிருக்கின்றார்கள்.
1912ம் வருஷம் மே மாதத்தில் திருச்சியில் கூடிய மாகாண அரசியல் மகாநாட்டில் மதசம்மந்தமான தர்ம சொத்தைக் குறித்து சட்டம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீமான்கள் எல்.ஏ. கோவிந்தராகவைய்யரும், சேஷகிரி ஐயரும் கொண்டுவந்த மசோதாவுக்கு கவர்மெண்டார் அனுமதி கொடுக்கா தது தப்பு என்றும் கண்டன தீர்மானங்கள் ஸ்ரீமான்கள் சீனிவாச அய்யங் காரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
ஆனால் அத்தீர்மானத்தை அமுலுக்கு கொண்டு வரும்போது இந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், சேஷகிரி அய்யர் உள்பட பார்ப்பனர்கள் ஒரே கூட்டாக “சர்க்கார் மதத்தில் பிரவேசித்து விட்டார்கள். மதம் போச்சுது நா°திகமாச்சுது” என்று சத்தம் போட்டார்கள்.
தவிர, அதே சமயத்தில் திருச்சியில் கூடிய ஆசாரதிருத்த மகாநாட் டில் தலைமை வகித்த ஸ்ரீமான் மு.க்ஷ ராமநாத அய்யர் என்கின்ற ஒரு பார்ப் பனர் “ஜன சமூகம் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால் கோவில் களில் தேவதாசிகள் இருக்கும் ஏற்பாட்டை முற்றிலும் நீக்கிவிட வேண்டும்” என்று பேசி இருப்பதுடன் தேவதாசிகள் கோவிலில் உற்சவங்களிலும் பூஜை களிலும் வேலை செய்ய விடுவதினால் ³ உற்சவங்கள் பூஜைகள் இவைகளின் மகிமைகள் குறைந்து போகிறதால் அவர்கள் கோவிலில் வேலை செய்ய விடாதபடி சட்டத்தாலோ அல்லது வேறுவிதத்தாலோ தடுக்கப்படவேண்டுமென்கின்ற தீர்மானமும் ஏகமனதாய் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. (1913 ´ மே. µ திய “பிழைக்கும் வழி” 236, 238 பக்கம் பார்க்க)
ஆகவே இத்தீர்மானத்தை அமுலில் கொண்டுவர ஸ்ரீமதி முத்து லெக்ஷ்மி அம்மாளவர்கள் ஒரு மசோதா கொண்டுவர சர்க்காரை வேண்டிக் கொண்டதற்காக எத்தனை சா°திரிகள், சர்மாக்கள், ஆச்சாரியார்கள், சத்திய மூர்த்திகள் இதற்கு விரோதமாய் “மதம் போச்சு நா°திகமாச்சு” என்றுசப்தம் போட்டு எதிர்பிரசாரம் செய்கிறார்களென்று பார்த்தால் இப்பார்ப்பனர்களும் காங்கிரசும் சீர்த்திருத்தம் செய்வதின் உண்மை விளங்கும். ஆகவே பார்ப்பனர்கள் எந்த காலத்திலும் மக்கள் சமத்துவத்திற்கோ ஒழுக்கத்திற்கோ சீர்திருத்தத்திற்கோ அனுகூலமாயிருப்பார்களென்று நினைப்பது வேப்பங்காய் இனிக்கும் என்று நினைக்கும் மடமைக்கு சமானம் என்றே சொல்லுவோம்.
மூன்று மாதத்தில் ஆகக்கூடிய வேலை மூன்று வருஷத்தில் ஆவதா யிருந்தாலும் பார்ப்பனப் பூண்டை ஒதுக்கி வைத்து வேலைபார்ப்பதே உண்மையான காரியசித்திக்கு மார்க்கமாகும்.
குடி அரசு -–துணைத் தலையங்கம் – 15.01.1928