சாக்கடைக் குழிக்குள் மனிதர்கள் இறங்கும் அவலம்: கழகத் தோழர்கள் போராடி நிறுத்தினர்

சாக்கடைக் குழிக்குள் மனிதர்கள் இறங்கி, சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது நச்சு வாயுவில் சிக்கி, தொழிலாளர்கள் மரணமடைவது சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இழிவும் ஆபத்தும் நிறைந்த வேலைக்கு மனிதர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமாக ‘தலித்’ தொழிலாளர்கள் இந்த வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சென்i னமயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இதேபோல் சாக்கடைக்குள் இறங்கிய ஜனார்த் என்ற மாநகராட்சி ஊழியர் நச்சு வாயுக்கு 27.8.2013 அன்று பலியானார்.
மீண்டும் அதே பகுதியில் சாய்பாபா கோயிலருகே கடந்த ஆக°டு 16, 2014 அன்று தொழிலாளர்கள் சாக்கடை குழிக்குள் இறக்கப்பட்டனர். செய்தி அறிந்த மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இராவணன், மாரிமுத்து, மனோகர் உள்ளிட்டடோர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் இழி தொழிலை உடனே நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 124 ஆவது வட்ட மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த ஊழியர் களிடம் இது குறித்து புகார் செய்தனர். இதற்கிடையே தொழிலாளர் குழிக்குள்ளிருந்து வெளியேறிய நிலையில், ஒப்பந்தக்காரரான மோகன் என்பவர், இரண்டு சிறுமிகளை சாக்கடைக் குழிக்குள் இறக்கினார். இந்தக் கொடுமையை உடனடியாக நிறுத்தா விட்டால் இதே இடத்தில் போராட்டம் நடத்துவோம் என்று தோழர்கள் எச்சரித்தார்கள். ஒப்பந்தக்காரரர் வேலையை நிறுத் தினார். மாநகராட்சி இதற்கான எந்திரங்களை விலை கொடுத்து வாங்கியும், மனிதர்களையே பயன்படுத்தும் கொடுமை நீடிக்கிறது. ஆங்காங்கே மக்கள் களத்தில் எதிர்த்துப் போராடினால்தான் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

 

பெரியார் முழக்கம் 21082014 இதழ்

You may also like...

Leave a Reply