குழந்தை நலனைவிட ‘பசு’வின் பாதுகாப்பே முக்கியமாம்!

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவின் எல்லை வழியாக வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பதோடு, வங்கதேசத்துக்காரர்களுக்கு மாட்டிறைச்சியே கிடைக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் எதற்கும் பயன்படாத அடிமாடுகள், வங்கதேசத்துக்கு கடத்தப்படுகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இதைத் தடுப்பது இல்லை. ஆண்டுதோறும் இப்படி கடத்தப்படும் மாடுகள் 25 இலட்சம். வங்க தேசத்தில் இந்த அடிமாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக பதப்படுத்தப்பட்டு, ‘வளைகுடா’ நாடுகளுக்கு வங்க தேசத்திலிருந்து ஏற்றுமதியாகின்றன. வங்க தேசத்தில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், இந்தியாவில் பயன்பாடு இல்லாத மாடுகளை பாதுகாக்க முடியாததால் விற்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவே, எல்லையில் கடத்தல் ‘கண்டும் காணாமல்’ அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்நாத் சிங், இப்போது கடுமை காட்டுமாறு கூறியிருக்கிறார்.
இதனால், பல்வேறு பசு பராமரிப்பு கொட்டடிகளில் மாடுகளை கூடுதலாக பராமரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதற்காக ரூ.31,000 கோடி கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். இந்த செலவு, குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஊட்டச் சத்துக்காக செலவிடப்படும் தொகையை விட நான்கு
மடங்கு அ திகம். குழந்தைகள் நலனுக்கு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.8,000 கோடி அடிமாடுகளை வெட்டாமல் பராமரிக்க செலவிடப்பட வேண்டிய தொகை ரூ.31,250 கோடி ஏழைக் குழந்தைகள் நலனைவிட பசு மாடுகளின் நலன்தான். இந்த ‘வேத புரோகித’ ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

பெரியார் முழக்கம் 30042015 இதழ்

You may also like...

Leave a Reply