முனைவர் புரட்சிக்கொடிக்கு விருது
திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் மருந்தியல் தொழில் நுட்பத்துறையில் உதவிப் பேராசிரியர் பெரியாரியலாளர் முனைவர் புரட்சிக்கொடி 08.05.2015 அன்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் “TECHNOLOGY INNOVATION AWARD” என்ற பெருமைக் குரிய விருதைப் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் மிக உயரிய விருதான ”‘தமிழ்நாடு இளம் பெண் அறிவியலாளர் விருது’” (Tamilnadu Young Women Scientist Award), Fast track Young Scientist Research award போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பெற்றோர் புலவர் ஆய்.அறிவன் – அறிவொளி இருவரும் பெரியார் தொண்டர்கள். ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். புரட்சிக் கொடியும் ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவரது வாழ்வினையர் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தாமரைக் கண்ணன் ஆவார்.
அவருக்குப் ‘புரட்சிகொடி’ என்று பெயர் சூட்டியவர் பெரியார் என்பது கூடுதல் பெருமை…
72 ஆய்வுக்கட்டுரைகளை எழுதி யுள்ளார். உலகப்புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 4 முறை சர்வதேச அளவிலான ஆராய்ச்சியாளர் மாநாடுகளிலும் 23க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான ஆய்வு மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரை களை சமர்ப்பித்துள்ளார். தேசிய அளவிலான ஆய்வாளர் மாநாடுகளை 4 முறை நடத்தியும் உள்ளார்.
புரட்சிக் கொடியின்ஆய்வுப் பணி தொடரட்டும். மேலும் பல சாதனைகள் புரிய ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாழ்த்துகிறது!
பெரியார் முழக்கம் 14052015 இதழ்