ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது
4-7-2015 சனிக்கிழமையன்று காலை 10-00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், சென்னை, கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது.
அதில் கழகத்தின் செயல்பாடுகள், தேவைப்படும் மாற்றங்கள், இந்து மதவெறி இயக்கங்களின் நிகழ்கால நடவடிக்கைகள், கழகத்தின் முன்னணி அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய குழந்தைகள் பழகு முகாம், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்திப்பு, சுய மரியாதை கலை, பண்பாட்டுக் கழகத்தின் காட்டாறு இதழ், கழகத் தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் போன்ற பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதன் பின்னர் கீழ்க்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது.
1) கழகத்தின் செயலவைக் கூட்டத்தை எதிர்வரும் 19-7-2015 ஞாயிறு அன்று தருமபுரியில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது.
2) தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் செயலவையைத் தொடர்ந்து மாவட்டக் கழகங் களின் கலந்துரையாடல்களை நடத்துவது, மாவட்டக் கழக அமைப்புகளைப் புதுப்பிப்பது, செயல்பாடுகளை முடுக்கி விடுவது எனத் தீர்மானிக்கப் பட்டது.
3) தனியார்துறை இட ஒதுக்கீடு, எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் பயண நோக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த கோரிக்கை ஒன்றினை செயலவையில் விவாதித்து ஒரு பரப்புரைத் திட்டத்தை உருவாக்கு வது எனத் தீர்மானிக்கப்
பட்டது.
4) இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த அய்.நா.வை வலியுறுத்தி நடை பெறும் கையெழுத்து இயக்கங் களை மேலும் தீவிரப்படுத்து வதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
5) தங்கள் சொந்த வேலைகள் காரணமாக கழகத் தலைமைக் குழுவில் தொடர்ந்து பணியாற்ற இயலாமையால் விலகல் கடிதம் கொடுத்துள்ள தோழர்கள் சூலூர் தமிழ்ச்செல்வி, தி. தாமரைக் கண்ணன் ஆகியோரின் விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 09072015 இதழ்