குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கள் தனுஷ் எம்.குமார், ஜி.செல்வம் ஆகியோர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4.25 லட்சம் பேர், கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குஜராத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 41,632 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 9,606 குழந்தைகளும், 2021-22 நிதியாண்டில் 13,048 குழந்தைகளும், 2022-23 நிதியாண்டில் 18,978 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு குஜராத்தில் இரட்டிப்பாகி வருகிறது. குஜராத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அதில் 30,000 குழந்தைகள் இறக்கும் அவலம் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில் உள்ள 39% குழந்தைகள் வயதிற்குரிய ஏற்ற எடையில் இல்லை என்று தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

You may also like...