8. மூன்றாம் மாதம் ஆரம்பம்
வருகிற பிப்ரவரி 6ந் தேதி பெரியார் சிறை புகுந்து இரண்டு மாதம் முடிவடைந்து மூன்றாவது மாதம் ஆரம்பமாகிறது. பெரியாரைச் சிறைப்படுத்துவதினால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒழித்துவிடலாமென்று காங்கிரஸ் சர்க்கார் எண்ணியிருந்தால் அவர்கள் இதற்குள் ஏமாற்ற மடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம் 19/8/ஜுன் 3ந்தேதி தோழர் செ. தெ. நாயகம், சாமி ஷண்முகானந்தா, பல்லடம் பொன்னுனசாமி ஆகியவர்கள் கைது செய்யப்பட்டது முதல் இந்தியப்போர் ஆரம்பமாயிற்று அன்று முதல் பெரியார் சிறை புகுந்த 1938 டிசம்பர் 6ந்தேதி வரை அதாவது சுமார் 6 மாத காலத்தில் கைதியானனவர்கள் தொகை ஆண்கள் 470பெண்கள் 20 குழந்தைகள் 8 ஆனால் டிசம்பர் 6ந்தேதி முதல் நேற்று வரை அதாவது 53நாட்களில் சிறை புகுந்தவர்கள் தொகை ஆண்கள் 215 பெண்கள் 20 குழந்தைகள் 8 இதனால் விளங்குவது என்ன? மறியலுக்கும் பெரியாருக்கும் கோடியான சம்பந்தம் இல்லை என்பது விளங்கவில்லையா? பெரியார் தூண்டுதலினாலேயே நடந்திருந்தால் அவர் சிறைபடுத்தப்பட்டதோடு விரோதியான பெரியாருடையவும் ஆரிய நாகரிக எதிரியான பாரதியாருடையவும் சூழ்ச்சியல்ல வென்பது வெளியாகி விட்டது. இந்தி எதிர்ப்பு இயக்கம், ஜாதி மதக்கட்சி வித்தியாசமின்றி சகல தமிழர்களுடையவும் பொதுவான இயக்கம் என தாம் பன்முறை கூறியிருப்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே மறுக்க முடியாத அத்தாட்சி தமிழர் விடுதலைக்காக சென்ற 15 வருஷ காலமாக பெரியார் உழைத்து வருவதினால் தமிழர் விடுதலைக்காகத் தோன்றி யிருக்கும் இந்தி எதிர்ப்புப் போருக்கும் பெரியாருக்கும் நெருங்கிய சம்பந்த மிருக்க வேண்டுமென காங்கரஸ் சர்க்கார் ஒருகால் எண்ணியிருக்கலாம். எப்படியானாலும் சரி பெரியார் சிறைபுகுந்துவிட்டார் பிப்ரவரி 6 ந்தேதி பெரியார் சிறைபுகுந்த மூன்றாவது மாதமும் ஆரம்பமாகப் போகிறது இந்நிலையில் தமிழர் கடமை என்ன? 60வது வயதிலே பெரியார் சிறைபுகக் காரணம் என்ன? சுயநலங்கருதி அவர் சிறைபுகுந்தாரா? பொது நலங்கருதி சிறை புகுந்தாரா? தமிழர் விடுதலைக்காகவே அவர் சிறை புகுந்தார் என்பதை நேரியபுத்தியில்லாத காங்கிரஸ்காரர்களைத் தவிர ஏனைய தமிழர்கள் எல்லாம் ஒப்புக்கொள்வார்கள் தமிழர்விடுதலைக்குச் சிறைபுகுவது பெரிய பேரானந்தம்.
தின்று வாயில் வந்ததையும் பேசிவிட்டு வீணே முதுமைக்கும் நோய்க்கும் ஆளாகி நமக்கு இஷ்டமில்லாமல் சாவதைவிட இப்பேர்ப்பட்ட ஏதாவது ஒரு சிறு நன்மை உடைய(அதாவது தமிழர் விடுதலைக்காக) காரியத்துக்காக ஆவது வாழ்ந்து மறைவது அறிவுடைய காரியம் எனக் கருதியிருப்பதால் அந்த (அடக்கு முறைக்கு ஆளாவதை)வெகு நாளாக எதிர்பார்த்த காரியம் கைகூடிற்றென்ற மகிழ்ச்சிலேயே இருக்கிறோம் அவ்வளவு மாத்திரம் தானா? அல்ல, அல்ல இந்நாட்டு உண்மைத் தமிழ் மக்களுக்கு அவர்களுடைய வீரத்தையும் தன் மானத்தையும் காட்டுவதற்கும் அவர்களது வாழ்வும் செல்வமும் உயிரும் நற்கருமத்துக்குப் பயன்படுத்துவதற்கு மான கிடைத்தற்கரிய அருங்சமயம் கிடைத்திருக்கிற தென்றும் மகிழ்ச்சியடை கின்றோம் என 1938 ஜுலை 3ந்தேதி குடி அரசு வாயிலாகத் தமிழ்மக்களுக்குத் தெரிவித்து விட்டார். ஆகவே சிறைவாசத்தை அவர் எதிர்பார்த்தே இருந்தார் தள்ளாத வயதிலே சிறை புகுவதனால் பிராணாபத்து ஏற்பட்டாலும் தமிழர்முன்னேற்றத்துக்க தமிழர் விடுதலைக்காக தமது உயிரைப்பலி கொடுக்கவும் துணிந்தே இருந்தார். ஆகவே அவருடைய நோக்கம் நிறைவேறிவிட்டது மெய்யாகவே தமது நோக்கம் நிறைவேறியது பற்றி அவர் பெருமகிழ்ச்சியுடனேயே இருக்கிறார் சிறையுணவு பிடிகாமல் அவருக்குதோன்றியிருக்கும் வயிற்று வலியையும் அவர் லஷ்யம் செய்யவில்லை உயிரைப் புல்லாக மதித்திருப்பவர் வயிற்றுவலிக்கு அஞ்சுவாரா? அவரது உடலைப்பற்றியோ, உயிரைப் பற்றியோ,உடமையைப்பற்றியோ, உற்றார் உறவினரைப் பற்றியோ அவருக்குக் கவலையில்லை. அவரது கவலையெல்லாம் தமிழர் விடுதலையைப் பற்றியதே. இந்தி எதிர்ப்பு இயக்கம் தோல்வியுற்றால் இன்னும் குறைந்த பட்சம் 200 ஆண்டுகாலம் தமிழர்களுக்குத் தலை நிமிரமுடியாதென்பது அவருடைய திடமான அபிப்பிராயம். இந்திப் போர் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலவாழ்வு அடங்கியிருக்கிற தென்பது அவருடைய உறுதியான நம்பிக்கை ஆகவே அவருடைய விருப்பம் நிறைவேறுவதற்குத் தேவையான முயற்சிகளை யெல்லாம் செய்ய வேண்டியது, அவர் யாருக்காகச் சிறைசென்றாரோ அவர்களது நீங்காக் கடமையாகும். எனவே அவர் சிறைபுகுந்த மூன்றாம் மாதம் ஆரம்பமாகும்பிப்ரவரி 6ந்தேதியன்று இந்திப்போர் வெற்றிக்காகத் தம்மாலான முயற்சிகள் எல்லாம் செய்வதாக பொதுக்கூட்டம் கூட்டி தமிழர்கள் எல்லாம் சங்கற்பம் கொள்ள வேண்டும். விடுதலையும், குடி அரசும் பெரியாரின் இரு கண்கள்; அம்மட்டோ? உயர்நாடி என்றாலும் மிகையாகாது தமிழர் இயக்க வெற்றிக்கு விடுதலையும் குடிஅரசும் இன்றியமையாப் போர்க் கருவிகளாகும் ஆகவே அவ்விருபத்திரிகைகளும் செவ்வனே நடைபெறுதற்குக் தேவையான உதவிகள் செய்யவேண்டியது தமிழ் மகளின் நீக்காக்கடமை. காங்கிரஸ் சர்க்காரால் அவ்விரு பத்திரிகைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் இடையூறுகள் சொல்லும் தரத்தக்கனவல்ல. 3000ரூபாய் ஜாமீன்கட்டி இருபத்திரிகைகளும் நடைபெறுகின்றன. ராஜதுரோகச் சட்டத்துக்கும் வகுப்புத்துவேஷச் சட்டத்துக்கும் பயந்து கொண்டே இரு பத்திரிகைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. விடுதலை மீது சுமத்தப்பட்டிருந்த ராஜதுரோகக் குற்றம் தள்ளுபடியாகி விட்டது. வகுப்பு துவேஷக் குற்றத்துக்காக அளிக்கப்பட்ட தண்டனை மீது சென்னை ஹைக்கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது முடிவு என்னாகுமோ தெரியவில்லை. கோர்ட்டு வழக்கென்றால் சும்மாபோகுமா? பல வழிகளினும் பணச் செலவு தான் விடுதலை, குடிஅரசுப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களைத் தமிழர்கள் தன்கறியும் பொருட்டே இவைகளையெல்லாம் விளக்கிக்கூறுகிறோம். ஆகவே அவ்விருபத்திரிகைகளுக்கும் சந்தா தாரராகியும் நன்கொடையளித்தும் விளம்பரங்கள் தந்தும் தமிழ் மக்கள் ஆதரிக்க முன்வர வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
குடிஅரசு, தலையங்கம் -29.1.1939