மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.
மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.
ஜூலை
4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு)
5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்)
7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்)
9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு)
11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு)
12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்)
14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை)
16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்)
18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு)
19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி. வேலுச்சாமி, நங்கவள்ளி சீ. அன்பு ஆகியோர் உரையாற்றுகிறார்கள். காவை. இளவரசன், மேட்டூர் சி. கோவிந்தராசு ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
கூட்டங்களின் நோக்கம் குறித்து மேட்டூர் கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கை: நாம் இன்று மிக நெருக்கடியான காலத்தில் ஒடுக்குமுறைச் சமூக அமைப்பில் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனைவரும் அறிவீர். நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மதத் தீவிரவாதம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்து மத பயங்கரவாத சக்திகள் இந்துப் பண்பாட்டை (?) இந்து வெறியை மக்களிடையே புகுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. கல்வியை காவி மயமாக்குதல்; வரலாற்றைத் திரித்து எழுதுதல்; இந்துத்துவத்தின் தேசத் தொண்டர்கள் என்ற பெயரில் வன்முறைக் கும்பலை உருவாக்கி பயிற்சி அளித்தல்… என அதன் நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன. இதன் விளைவாக மதக் கலவரங்கள் அதிகரித்து, நாடு வன்முறைக் காடாக மாறி வருகிறது.
இத்தகையப் போக்கை நாம் தொடர்ந்து அனுமதிக்கப் போகிறோமா?
மத வன்முறையாளர்களுக்கான தளமாக நாடு தொடர்ந்து இருக்க வேண்டுமா? இப்படி எண்ணற்ற வினாக்கள் நம் முன் எழுகின்றன. இவ்வினாக்களுக்கான விடையாக நாம் இன்று பார்ப்பது பெரியாரைத் தான்! சமூக, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடி சமத்துச் சமுதாயம் காண கிளர்ச்சி செய்தவர் பெரியார். அவரது அயராத போராட்டத்தின் பயனாக விழித் தெழுந்த இச்சமூகத்தை மதவாதம் என்ற நஞ்சுக்கு இரையாக்க பல்வேறு சக்திகள் முயன்று வருகின்றன. எனவே பெரியாரின் சிந்தனைகள் இன்று மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. அவரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடே… இந்த பெரியார் கொள்கை விளக்க தெரு முனைக் கூட்டங்கள் என்று துண்டறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 16072015 இதழ்