சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

கோமதி -ஆனந் பாபு ஆகியோரின் இணையேற்பு விழா 10.01.2022 அன்று  திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு தலைமையில் நடைபெற்றது.

கழக மாநகர தலைவர் தனபால். மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து, திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திவிக சார்பில் கழகத் தோழர்கள்  நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 3000/- வழங்கினர். மதியம் மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெண் வீட்டார் சார்பாக அம்மா கர்ப்பகவள்ளி, தாத்தா முருகன், மாமா நல்லமுத்து, தம்பி லிங்கேசுவரன் நண்பர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 20012022 இதழ்

You may also like...