சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டத்தின் கலந்துரையாடல் கூட்டம், 11.12.2021 அன்று மாலை 6 மணியளவில், திவிக தலைமையகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு கூடுதல் சந்தா சேர்ப்பது, கழகத்தின் அடுத்தக் கட்ட பணிகள், வரும் டிசம். 24இல் தந்தை பெரியார் நினைவு நாளில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்துவது போன்றவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர்களின் சில கேள்விகளுக்கு பதில் கூறியும், கழகத்தின் செயல்பாடுகள், திராவிடர் இயக்கத்தின் தேவை குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 16122021 இதழ்

You may also like...