ஈரோடு சித்தோட்டில் கழகம் எடுத்த ஜாதி மறுப்பு இணையர் சந்திப்பு; கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக நவம்பர் 26 அன்று சட்ட எரிப்புப் போராட்டம் -ஜாதி ஒழிப்பு ஈகியர் கருத்தரங்கு, ஜாதி மறுப்பு இணையர்கள் சந்திப்பு மற்றும் மாவட்ட கழக அலுவலகம் திறப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள் சித்தோட்டில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வுக்கு கழகத்தின்  அமைப்புச் செயலாளர்  ப. இரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர்

பெ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரைக்குப்பின் மாநில பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையைத் தொடர்ந்து,  மூத்த வழக்கறிஞர் ப பா. மோகன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), திராவிடர் விடுதலைக் கழகத்துக்கான மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து, அறிவியல், பொதுவுடைமைச் சித்தாந்தம், பெரியாரியம் ஆகியவனப் பற்றிய செய்திகளை முன் வைத்து உரையாற்றினார்.

இறுதியாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, வரலாற்றுச் செய்திகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் யாழ். எழிலன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல், திருப்பூர், ஈரோடு வடக்கு, காவலாண்டியூர் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள் வருகை புரிந்து பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் மாவட்டத் தலைவர் செல்வராஜ், பொருளாளர் கிருஷ்ணன், மணிமேகலை, விருதுநகர் செந்தில், மாநகரத் தலைவர் குமார், சத்தியமூர்த்தி, மாநகரச் செயலாளர் திருமுருகன், கணேசன், சித்தோடு கமலக்கண்ணன், சி.எம். நகர் பிரபு, பெருமாள்மலை ராசண்ணன், முருகன், விஜயரத்தினம், சென்னிமலை கோபிநாத், பெருந்துறை பழனிச்சாமி மற்றும் ஆதரவாளர்களும் பெருந்திரளாய் பங்கேற்றனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் சிறப்பான முறையில் உணவு வழங்கப்பட்டது.

செய்தி : எழில்

பெரியார் முழக்கம் 02122021 இதழ்

You may also like...