சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

02.03.2020 அன்று மாலை 4:30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உரிமைக்காகப் போராடிய மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், கலவரக்காரர் களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், எஸ்டி.பி.அய், தமிழ்த் தேசியப் பேரியக்கம், பி.எஃப்.அய், மக்கள் அரசுக் கட்சி, மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு டெல்லி கலவரத்தின் பின்னணியையும், கலவரத்தைக் கண்டித்தும் கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வட சென்னை மாவட்டத் தலைவர் யேசுகுமார், தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சுகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தோழர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 12032020 இதழ்

You may also like...