ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர்

IMG_6416

13.8.2015 அன்று 2 மணிக்கு, மூத்த பெரியாரியலாளரும், கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடி தாங்கி நிகழ்வில், (தலித் சடலம், ஆதிக்க ஜாதி வீதி வழியாகச் செல்லத் தடை போட்ட ஊர் – குடிதாங்கி. அதை மீறி சடலம் எடுத்துச் செல்லப்பட்டது) மையப் புள்ளியாய் நின்று இயங்கியவருமான ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், உடல் நலிவுற்றிருக்கிற செய்தியறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும், எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதன் ஆகியோர் கும்பகோணத்தில் அவரது இல்லமான அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில் சந்தித்தனர்.

அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றிலுள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

பெரியார் முழக்கம் 20082015 இதழ்

You may also like...

Leave a Reply