ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக கலந்தாய்வுக் கூட்டம் 30.12.18 மாலை 4 மணிக்கு,  சென்னிமலை செல்வராசு இல்லத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் மடத்துக் குளம் மோகன்,  சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டக் கழகம் சார்பில் ஒன்றிய கிளைக் கழகக் பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. எதிர்வரும் பொங்கல் விழாவை தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்தாய்வில் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 10012019 இதழ்

You may also like...