சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

“தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தின்” சென்னை மாவட்ட பரப்புரைக் குழு 20.08.2018 அன்று காலை 9.30 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து பரப்புரைப் பயண முழக்கத்தோடு பயணத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கிண்டி கத்திபாரா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மா.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்) மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பயணத்தின் முதல் பரப்புரைப் பயணக் கூட்டம் நங்கநல்லூர் சுரங்க பாதை அருகே காலை 11 மணிக்கு “விரட்டு” கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத் தோடு தொடங்கப்பட்டது. அருள்தாஸ், தமிழர் உரிமை பாடல்களைப் பாடினார். இரண்டாவது கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு பரப்புரைப் பயணம் தொடங்கியது.

பரப்புரைப் பயண தோழர்களுக்கு நங்கநல்லூர் பகுதியை சார்ந்த குகனாந்தன் மதிய உணவை தோழர்களுக்கு  ஏற்பாடு செய்து கொடுத்தார்.

பின்பு, மாலை 3 மணிக்கு பரப்புரைப் பயணம் கோவிலம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆரம்பித்தது. முதல் நாளில் இறுதி பரப்புரையாக மாலை 5 மணிக்கு சேலையூர் பேருந்து நிறுத்தம் அருகே பரப்புரையை ஆரம்பித்தனர். சேலையூர் பகுதியில் இரவு தோழர்கள்  தங்குவதற்கு பாவலர் பெருஞ்சித்தனாரின் மகன் பொழிலன் பெருஞ்சித்திரனார் தமிழர்களம் மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இரவு உணவு இயக்க ஆதரவாளர் பிரான்சிஸ் ஏற்பாடு செய்தார்.

முதல் நாள் பிரச்சாரப் பயணத்தில் ந. அய்யனார், இரா. உமாபதி, எட்வின் பிரபாகரன், பெரியார் யுவராஜ் ஆகியோர் பிரச்சாரப் பயண நோக்கத்தைக் குறித்து பேசினர்.

கலந்துகொண்டோர் : கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், தென்சென்னை மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன்,

ப. அருண்குமார், யுவராஜ், கார்த்திக் இராஜேந்திரன், சுகுமார், எட்வின் பிரபாகரன், இராவணன், இரணியா, ஓவியா, தேன்ராஜ், அருண்குமார், பாஸ்கர், அருள்தாஸ், முரளி, மோகன், ஜேம்ஸ், இரவி பாரதி மற்றும் விரட்டுக் கலைக் குழுவினர்.

பெரியார் முழக்கம் 23082018 இதழ்

You may also like...