சேலம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்
முதன் மந்திரியால் மூன்று முறை நிறுத்தப்பட்டது
சேலம் ஜில்லா போர்டு மெம்பர் திரு. ராஜமாணிக்கம் பண்டாரம் முதல் பேர் சென்னை கவர்னரின் அந்தரங்க காரியதரிசிக்கு அனுப்பிய தந்திச் செய்தி ,
ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு போல்க்ஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்தவுடனே லோக்கல் போர்டு ஆக்டு 17-வது பிரிவின்படி மார்ச் 31 ² வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் கூட்டும்படி தீமானிக்கப்பட்டது. திருபோல்ஸின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கூட்டத்தில் தானே மறு தலைவர் தேர்தலையும் நடத்தவேண்டுமென்று மந்திரி உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவுபடி திரு போல்சின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட கூட்டத்திலேயே ராவ்பகதூர் எல்லப்பசெட்டியார் ஏகமனதாக எல்லோராலும் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார்.
ஆனால் தேர்தல் முடிவை 6-வாரம் வரை கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் மந்திரி நிறுத்தி வைத்தார். மே15 தேதி திரு எல்லப்ப செட்டியார் தேர்தலை ரத்து செய்து உடனே வேறு தேர்தல் நடத்தவேண்டுமென மந்திரி உத்தரவிட்டார். இரண்டாம் முறையும் அவர் உத்தரவுப்படி நடத்தப்பட்டது. மே 23 தேர்தல் நடத்துவதாக ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மே 22 தேதி மந்திரி மீண்டும் தேர்தல் நோட்டீஸை ரத்து செய்து நோட்டீஸின் போக்குவரத்துக்கு 2 நாளும் சட்டப்படி கூட்டத்துக்கு முன் 7 நாளும் ஆக 9 நாள்களுக்கு முன்னாலேயே தேர்தல் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மூன்றாம் முறையும் அவரது உத்தரவு அனுசரிக்கப்பட்டது. ஜூன் 4 தேதி தேர்தல் நடத்துவதாக குறிப்பிட்டு 11 நாளைக்கு முன்னாலேயே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூன் 3 தேதி தேர்தலையும் மந்திரி ரத்துசெய்து, போர்டு மெம்பர்களில் ஐந்துபேர் போர்டு கண்றாக்டில் சம்மந்தப்பட்டிருப்பதாக எதிர் கக்ஷியார் அனுப்பி யிருக்கும் மனுவை விசாரித்து முடிவு செய்த பிறகு தேர்தல் நடத்தினால் போதுமென்று ஒரு உத்தரவு அனுப்பினார். வைஸ் பிரஸிடெண்டு அந்த உத்திரவை போர்டு மீட்டிங்கில் ஆஜராக்கினார். ஏதோ தப்பெண்ணத்தின் பேரில் அந்த உத்திரவு அனுப்பப்பட்டிருக்க வேண்டுமென்றும், அதைப் புனராலோசனை செய்ய ஸர்க்காரிடம் விண்ணப் பம் செய்து கொண்டு தேர்தலை அன்று நடத்த வேண்டுமென்று போர்டு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டபடி தேர்தல் நடந்தது. ராவ்பகதூர் எல்லப்ப செட்டியார். எம்.எல்.ஸி. மீண்டும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விஷயங்களை விளக்கி ஜுன் 5 தேதி கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மீண்டும் மந்திரி இவ் விஷயத்தில் குறுக்கிடக் கூடுமென்று வதந்தி உலாவுகிறது. நான்கு தாலூகா போர்டு மெம்பர்களும் 6 டிஸ்ட்டிரிக்டு போர்டு மெம்பர்களும் உள்பட பத்துபேர் கவர்னர்களைப் பேட்டிகாண உத்திரவு வாங்கித் தானாக வேண்டு மென்று பிரார்த்திக்கிறோம் .
குடி அரசு – கட்டுரை – 19.06.1927