கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் ஜூலை 29ஆம் தேதி முதல் ஈரோட்டிலிருந்து தொடங்கின. ஈரோடு ரெசிடென்சி அரங்கில் பகல் 11 மணியளவில் கடவுள் ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தைச் சார்ந்த வே.சு. மணியம், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஈரோடு பெரியார் நினைவிடத்தைப் பார்வையிட வந்த அவர், கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்துப் பேசிய பிறகு, மாவட்டக் கழகக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மலேசியாவில் கழகப் பணிகளை விளக்கி, சற்று நேரம் உரையாற்றி விடைபெற்றார். கலந்துரை யாடலில் கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மாவட்ட செயலாளர் சண்முகப் பிரியன், மாவட்டத் தலைவர் செல்லப்பன், அமைப்பாளர் குமார், செல்வராஜ், மாணவர் விஜயரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, நகரத் தலைவர் திருமுருகன், இராசன்னா, சுகுணா, கோபிநாத், இசைக்கதிர், சித்தோடு எழில், ஆதரவாளர் முருசேன், நடராசன், மோகன்ராஜ், ஆசிரியர் சிவக்குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மூத்த பெரியார் தொண்டர்கள் இனியன் பத்மநாபன், அறிவுக்கன்பன் ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.
ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து வாரம் ஒருமுறை பரப்புரை செய்தல்; பயிற்சி முகாம்களை நடத்துதல்; ஜாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு பாதுகாப்பு தரும் அமைப்புகளை உருவாக்குதல், தமிழின உணர்வோடு செயல்பட்ட காமராசர், புரட்சிக் கவிஞர் போன்ற தலைவர்களுக்கு விழா எடுத்து, அதன் வழியாக கொள்கைகளை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வ யோசனைகளை தோழர்கள் முன் வைத்தனர். பொதுச் செயலாளர் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் நிறைவுரையாற்றி பொறுப்பாளர்களை அறிவித்தார். (விவரம்: தனியே வெளியிடப்பட்டுள்ளது)
கோபி
அதே நாளில் பிற்பகல் 4.30 மணியளவில் கோபி ‘லைன்ஸ் கிளப்’ அரங்கில் மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஈரோடு ப. சிவக் குமார், கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூற, வெளியீட்டு பிரிவு செயலாளர் இராம. இளங்கோவன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, பவானி வேணுகோபால், மாவட்ட செயலாளர் அர்ஜுனன், எலத்தூர் அழகிரி, நம்பியூர் ரமேஷ், கொடிவேரி ஜெயக்குமார், சூர்ய பிரகாசு, மூர்த்தி, அலங்கியம் ரவி, வேல் முருகன், கலைச் செல்வன், கொளப்பலூர் சுப்ரமணி, துரை, மூர்த்தி, சதுமுகை பழனிச்சாமி, பேச்சாளர் வேல்சாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் காளியண்ணன் மற்றும் அறிவியல் மன்ற சார்பில் ஆசிரியர் சிவகாமி, ரஞ்சிதா ஆகியோர் கருத்துகளை முன் வைத்தனர். பொதுச் செயலாளர் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார்.
மாவட்ட கழக அமைப்பு செயல்பாடுகள் தொடர்பாக, கழகத் தோழர்கள் கருத்துகளை முன்வைத்ததோடு மாவட்டக் கழகம் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார். (தனியே வெளியிடப்பட்டுள்ளது)
திருப்பூர்
30.7.2015 அன்று காலை 11 மணி யளவில் திருப்பூரில் மாவட்டக் கலந்துரையாடல் தொடங்கியது. மாவட்டக் கழகத் தலைவரும் கழகப் பொருளாளருமான திருப்பூர் துரைசாமி உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறி, தோழர்கள் தங்கள் கருத்துகளை மனம் திறந்து முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாவட்ட செயலாளர் முகில்ராசு, அமைப்பாளர் சண்முகம், மாநகர செயலாளர் குமார், மணிகண்டன், பல்லடம் வடிவேலு, பல்லடம் மணிகண்டன், நீதிராசன், கருணாநிதி, பரிமளராசன், முகில் முத்து பிரசாத், தன கோபால், நாராயண மூர்த்தி, அகிலன், மலரினியன், பல்லடம் சுந்தரமூர்த்தி, சங்கீதா, மாஸ்கோ நகர் நகுலன், பானு, மூர்த்தி, உடுமலை குணசேகரன், பிரசாத், மாப்பிள்ளைசாமி, ஆசிரியர் சிவசாமி, குட்டிமணி, தண்டபாணி ஆகியோர் பேசினர். மாவட்டக் கழகம், நகரக் கழகம் தொடர்பான செயல்பாடுகளில் தோழர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு மாவட்ட செயலாளர் முகில்ராசு விளக்கமளித்தார். கழகத் தலைவர் நிறைவாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு விளக்கமளித்து, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். (தனியே வெளியிடப்பட்டுள்ளது)
கோவை
மாலை 4 மணியளவில் கோவை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் ஆதித் தமிழர் அரங்கத்தில் நடைபெற்றது. நேரு வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுகவுரையைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், சூலூர் பன்னீர் செல்வம், உக்கடம் கிருட்டிணன், கிணத்துக்கடவு நிர்மல் குமார், அன்னூர் முருகேசன், மாணவர் வெங்கடேசன், சூலூர் பார்த்திபன், ஆதரவாளர் சாந்த குமார், நேரு தாஸ், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பொள்ளாச்சி மாவட்டக் கழகத்தை, கோவை மாவட்டக் கழகத்துடன் இணைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பயிற்சி முகாம்களை நடத்துதல்; கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கான உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துதல்; ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்’ பரப்புரை இயக்கத்தை திட்டமிட்டு சிறப்பாக நடத்துதல்; புதிய நூல்களை வெளியிடுதல்; கழகப் பரப்புரை வாகனங்களை முழுமையாகப் பயன்படுத்துதல்; கழகத்தில் செயல்படத் தொடங்கியுள்ள புதிய இணைய தளம், மாவட்ட வாரியாக இணைய தளத்தில் செய்திகளை ஒருங்கிணைக்க செய்தி தொடர்பாளர்களை நியமித்தல் ஆகிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரண்டாம் கட்டப் பரப்பரைக் கூட்டங்கள் ஆகஸ்டு 5ஆம் தேதி சேலத்திலிருந்து தொடங்குகிறது.
-நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 06082015 இதழ்