ஐயங்காருக்கு அமெரிக்கா மாதின் நற்சாக்ஷி பத்திரம்
ஸ்ரீ.ளு.சீனிவாசஐயங்காருடையவும் அவர்தம் சிஷ்ய கோஷ்டிகளு டையவும், மோசத்தைப் பற்றியும் அவர்களது தேசத்துரோகம் நாணயமற்ற தனம் பார்ப்பனரல்லாதாரிடம் துவேஷம் திறமையின்மை ஆகியதுகளைப் பற்றியும் நாம் பன்முரை எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதற்கு அனுசரனை யாக அநேக சாக்ஷிகளும் குவிய ஆரம்பித்த இக்காலத்தில் ஐயங்கார் கூறும் ஒரே பதில் யாதெனில் “ நான் பலர்களுக்கு கொடுத்து வந்த பணத்தை நிருத்தி விட்டேன் அதற்குத்தான் இவ்விதம் கூருகிறார்கள். அதை நம்பாதீர்கள்” என்கிறார். ஆனால் இன்று ஐயங்கார் யோக்கியதையைப் பற்றி, ஓர் அமெ ரிக்கா மாது சொல்வதற்கென்ன சொல்கிறார். மிஸ். கிரேஸ் ஹட்சின்ஸ் என்ற அமெரிக்கா மாது எழுதுவதாவது, “மகாத்மா காந்தி அரசியல் விஷயங் களிலே தலையிடுவதில்லை. அவர் சமய இயக்கத்தையே நடத்திவருகிறார். இந்தியா உயர்ந்த வாழ்வை பெறவேண்டுமானால் அது அங்குள்ள 7000 கிராமங்களின் வாயிலாகவே முடியும்” ………………………………………….. “ இந்தியன் நேஷனல் காங்கிரஸுக்குத் தலைமை வகித்தவர் ளு. சீனிவாச ஐயங்கார் என்ப வர், நடுத்தரமான யோக்கியதை உடை யவர். அரசியல் கக்ஷிகளை ஒழித்து ஒற்றுமை படுத்த போதுமான ஆற்றல் இல்லாதவர்”
ஒரு சமயம் இந்த அம்மையாரும் பணம் கேட்டு ஐயங்கார் கொடுக்க வில்லையோ?
குடி அரசு – செய்தி விமர்சனம் – 05.06.1927