பிராமணியத்தைக் கைவிடாதவர்களை எப்படி உள்ளிழக்க முடியும்?

திராவிடர் கழகத்தை பெரியார் உருவக்கினார், இது ஓர் இயக்கம், திமுகவை அண்ணா உருவக்கினார் அது இயக்கமல்ல ; அரசியல் கட்சி, அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கினார், மதிமுகவை வைகோ உருவாக்கினார்.இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிச் செயல்பகின்றன, பெரியார் இயந்திரங்களோ சாதி ஒழிப்பு சமூக நீதி பெண்ணுரிமைக்காகப் போராடுகின்றன.பெரியாப்பாதையை விட்டு விலகிப்போய் விட்டகட்சிகள் செயல்பாட்டை முன்வைத்து பெரியாரியத்தை விமர்சிக்க கூடாது? பார்ப்பணியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான இஸ்லாமிர், கிருஸ்தவர்களையும் ஒரே கீழ் கொண்டு வருவதற்கும் பெரியார் தேர்வு செய்த பெயர் திராவிடர்

இந்தப் பெயர் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இயக்கமானாலும், கட்சிகளான லும், அதன் கொள்கை அறிக்கைகளிலோ, நடைமுறையிலோ தமிழக உரிமைகள் அல்லாது அண்டை ‘திராவிட” மாநிலங்களின் உரிமைகளைப் பேசி இருக்கிறது அல்லது தமிழ் மேலாதிக்கத்தைத் திணித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? நிச்சயமாக இல்லை பெயரில் அடையாலச் சொல்லாக ‘திராவிடம் ‘ இருப்பது என்பது மட்டும் தான் இன்று திமிழகமே இழந்து நிற்கும் அனைத்து உரிமைகளுக்கும் காரணம் என்று முடிவுக்கு வந்து விட முடியுமா ? முடியது, ‘திராவிடம்’என்ற சொல் எவரையும் இழிவு படுத்தக்கூடியது அல்ல ஆனால் ‘பிராமணர்’ என்ற சொல்லும், பிராமணர் என்பதற்கான அடையாளங்கள் ஏன்னய சமூகத்தினரை, சாஸ்திரம் – சமூகக் கண்ணோட்டங்களில் இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்கிறது கடவுளிடம் நேரடித் தொடர்புக்குறிய தகுதிகள் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று அதன் அங்கீகாரத்தையும் பெற்று வைத்திருக்கிறார்கள் இந்த நிலையில் பிராமணியத்தைக் கைவிடாத பிராமணர்களை எப்படி உள்ளிழக்க மடியும் ? ‘தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடரியம் என்று பல முகங்களில் இன்று நிற்கிறது பிராமனரியம் என்று எழுதியிருக்கிறார் சமஸ் மறுக்க முடியாத உண்மை இந்த ‘ரியங்களையும்’ எதிர்க்க வேண்டும் என்பதிலும் அவை உயிர் பெற்று நிற்பதற்கான அடித்தளமான பிராமணியத்தையும் தொடர் த்து எதிர்க்க வேண்டும் என்ற தெளிவோடு தான் பெரியாரியம் இயங்குகிறது

— தமிழ் இந்து (7/4/17)

தோழர்  விடுதலை இராசேந்திரன். பொதுச்செயலாளர் தி.வி.க

You may also like...