தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது.

பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர்.

தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம்.

வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம்.

K.S.Duraisamy
Savings A/c No : 10235169636.
IFSC Code : SBIN0009314.
State bank of india,
Veerapandi branch,
Tirupur – 641605.

– திராவிடர் விடுதலைக் கழகம்

இச்செய்தியை அதிகமாகப் பகிரவும். தங்களால் முடிந்த நிதியைத் தந்து உதவவும்.

You may also like...