தண்டனையைக் குறைக்க கழகம் கோரிக்கை

“யாகூப் மேமனின் மரணதண்டனையை கருணை அடிப்படையில் இரத்து செய்து தண்டனை குறைப்பு வழங்க வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. “மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் இருவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்ட நிலையில், குற்றவாளியின் தம்பியான யாகூப் மேமன் தானாக முன் வந்து தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். அவ்வாறு தன் மீது குற்றம் இல்லை என தானாகவே முன் வந்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் யாகூப் மேமனை தூக்கிலிடப் போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல.
உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பிக் கொண்டுள்ள நிலையிலும், பல நாடுகள் மரணதண்டனையை இரத்து செய்துவிட்ட நிலையிலும் மனித நேயமுள்ள நாகரீக சமுதாயத்தை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கும் இந்தச்சூழலில் இந்தியாவில் இப்படி ஒரு மரணதண்டனை அறிவிப்பு வந்திருப்பது மிகவும் வருந்ததக்கதாகும்.
ஆகவே இந்த மரணதண்டனையை இரத்து செய்து யாகூப் மேமனுக்கு தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் என கோருகிறோம்” என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply