”பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நீக்கியுள்ளது மத்திய பாஜக அரசு” – ஆதாரமான ஆவணங்கள்

திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தினமும் வாட்ஸப் மூலம் தினமும் தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் செய்திகளை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் 02.04.2016 அன்று வாட்ஸப் செய்தியாக பகிர்ந்த ”பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நீக்கியுள்ளது மத்திய பாஜக அரசு” எனும் தலைப்பிலான வாட்ஸப் செய்தி பகிரப்பட்ட குழுகள் மத்தியில் அதிர்ச்சியான செய்தியாக பரவியது.தோழர்கள் பலர் வாட்ஸப் உரையாடல்கள் மூலமாகவும் கழக தலைமைக்கு அலைபேசி வாயிலாகவும் இந்த செய்திக்கான ஆதாரமான ஆவணங்களை வழங்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே மத்திய அரசு தற்போதைய சூழலுக்கு தேவைற்றது என ரத்து செய்து மத்திய அரசின் அரசிதழில் வெளியான சட்டங்களின் பட்டியலின் ஆவண நகல், (இதில் 39வது சட்டமாக உள்ள The Hindu Succession (Amendment) Act, 2005 எனும் சட்டம்தான் ரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் மத்திய அரசின் சட்ட சீர்திருத்தம் ஆகும்),1956 இந்து சொத்துரிமைச்சட்டத்தில் மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின்படி பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டதற்கான அரசு ஆவண நகல்கள் ஆகியவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு :
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் அமுலில் உள்ள பெண்கள் சொத்துரிமைச்சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரியார் 1929ல் செங்கல்பட்டில் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானத்தை அடியொற்றி 1989 ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை தனியாக அமுல் படுத்தி உள்ளது.அது தற்சமயம் நடைமுறையில் அமுலில் உள்ளது.

12923115_1725904294360130_5689966409381063447_n 12920398_1725905337693359_1626463854264607334_n 12805868_1725904817693411_7952621735386634384_n 12670837_1725904771026749_9210091416805222715_n 12524228_1725904811026745_3903590062058675979_n 12523827_1725904341026792_1585974967071333757_n 12495069_1725904744360085_6921314380278891281_n 11140007_1725905387693354_4374827041040606600_n

You may also like...