தொண்டினால் கிடைக்கும் புகழ்
“சிலர் புகழ் வேண்டாம், எனக்கு அதில் ஆசையே கிடையாது” என்று கூறுவார்கள். இது பகட்டுப் பேச்சேயன்றி நடைமுறையில் சாத்தியமானதல்ல; அது மட்டுமல்ல, புகழை விரும்பாதவன் மனித உணர்ச்சியோடு இருப்பவன் என்று கூறிவிட முடியாது. புகழ் நிலைத்திருக்க முடியும் என்றால் ஒரு நல்ல பாடகன் என்பவனின் புகழ் அவனோடு மறைந்துவிடும். அல்லது அவனைவிடப் பாடுபவன் தோன்றினால் அவன் உயிர் நாளிலேயே அவன் புகழ் அழிபட்டுவிடும். அதே போன்றுதான் ஒவ்வொரு தனிப்பட்ட புகழும். ஆனால், பொதுக் காரியத்துக்காக அதனால் மக்களுக்கு என்றும் நன்மையைப் பயக்கக் கூடியதாகச் செய்யப்படும் காரியங்களையும் அக்காரியவாதிகளின் புகழையும் என்றும் மறைக்க முடியாது. அவ்விதமான பெரியோர்கள் முதலில் ஏச்சுக்கும், தொல்லைக்கும் ஆளவார்கள். பின்னர்தான் நிலையாக விளங்கும்.
– காயல் பட்டினத்தில் ‘சீதக்காதி’ நினைவுநாள் விழாவில் பெரியார் பேருரை – 24.4.47
பெரியார் முழக்கம் 21112013 இதழ்