வினா… விடை…!

நகைகளாக பக்தர்கள் தந்த காணிக்கையை அரசின் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய தங்கக் கட்டியாக உருக்கினால் அது சாமி குத்தமாயிடும். – கோயில் நிர்வாகிகள் அச்சம்
ரொம்ப சரி; அதேபோல உண்டியல்ல விழுற கள்ளநோட்டுகளையும் அப்படியே ஏத்துக்கணும்போல. இல்லாட்டி சாமி குத்தமாயிடும்.
பசுக்களை கொல்ல தடைவிதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம்
அப்படி ஒரு அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்க வேண்டும் என்றால், பசு மாட்டுக்காக தனி ஆகமங்கள் இருக்க வேண்டும்.

திருவரங்கம் – ரெங்கநாதர் கோவிலில் ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குமுன் கதவு வாசலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். – செய்தி
எல்லாம் ஒரு பாதுகாப்புதான். எவராவது உண்மையிலேயே ‘சொர்க்கம்’ போயிட்டா, மீட்கணும்ல!

மோடி இரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளத்தில் 5,6ஆவது அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும். – செய்தி
அப்படியே கையோடு கையா முதலாவது அணுஉலை இயங்கு வதற்கும் ஒரு ஒப்பந்தம் போடுங்க… மறந்துடாதீங்க…

காவல்துறை மீது உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். – பிரதமர் மோடி
அது ரொம்ப சுலபம். உள்ளூர்ல காவல் நிலையத்தை மூடினா போதும்!

பெரியார் முழக்கம் 24122015 இதழ்

You may also like...