தமிழ் மக்களே!

 

பார்ப்பனர் ஆட்சி இந்தி என்றும், இந்துஸ்தானி என்றும் சொல்லிக்கொண்டு வடமொழியை (ஆரிய மொழியை) தமிழர்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைப்பதின் கருத்து என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

தெரியாவிட்டால் மலையாளத்தைப் பாருங்கள். மலையாளத்தில் வடமொழியும் வடமொழி நூலும் புகுந்து ஆதிக்கம் பெற்ற பின்னரே மலையாளப் பெண்கள் அதிலும் மேல் ஜாதி உயர் குடும்பப் பெண்களை பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக அனுபவிக்க முடிந்தது. இன்றும் சில பெண்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவே விரும்புகிறார்கள்.

சில மலையாளிகள் தங்களை மலையாளித் தகப்பன் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட மலையாளப் பார்ப்பானின் மகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறார்கள்.

நாம் எதற்காக இதை எடுத்துக்காட்டுகிறோம் என்றால் இந்தி – வடமொழி இந்நாட்டில் ஆதிக்கம் பெற்றால் தமிழ் மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு வந்து விடும் என்பதை எடுத்துக்காட்டவேயாகும்.

இப்பொழுது சூத்திரன் என்றால் யார்?

சூத்திரச்சி என்றால் யார்?

வடமொழி நூலும், பாஷையும் இங்கு ஆதிக்கமில்லாமல் இருந்தால் தமிழ் மக்களில் ஒரு சாரார் தம் பெண்களை வெளிப்படையாக விபசாரத்திற்காக விட்டுப் பிழப்பை நடத்துவார்களா? வடமொழி தெய்வங்கள் நம் நாட்டில் ஆதிக்கம் பெறாமல் இருந்தால் தெய்வங்களின் பேரால் நம்மில் ஒரு சாராரின் பெண்களை விபசாரத்திற்கு விடுவோமா?

ஆகவே வடமொழி கட்டாயமாய் புகுத்துவது என்பது தமிழர்களை ஆரியர்களுக்கடிமையாக்கவே தமிழர்கள் பெண்கள் ஈன நிலையை அடையவே. ஆகவே இப்படிப்பட்ட காங்கரசுக்கு ஓட்டுக்கொடுக்கப் போகிறீர்களா?

குடி அரசு – வேண்டுகோள் – 21.08.1938

You may also like...