Category: நிமிர்வோம் 2019

ஓர் அறிவிப்பு

‘நிமிர்வோம்’ டிசம்பர் இதழ் வெளி வரவில்லை. இது ஜனவரி மாத இதழ். இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் தொடர்ந்து இதழ் வெளி வரும். – நிர்வாகி, நிமிர்வோம். நிமிர்வோம் ஜனவரி 2019 மாத இதழ்

பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? ர. பிரகாசு

இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்பாட்டில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. A tough call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India  என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதிலும் கூட பெருமளவில் பாலினப் பாகுபாடு நிலவுவதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல; பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் மொபைல் பயன்பாட்டில் ஆண்-பெண் பாலினப் பாகுபாடு மிகுந்துள்ளது. நாம் இங்கு இந்தியாவைக் கணக்கில் கொள்வோம். இந்தியாவில் 71 விழுக்காடு ஆண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், 38 விழுக்காடு மட்டுமே பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி 31 விழுக்காடாக உள்ளது. இதை வெறுமனே பொருளாதாரக் காரணி என்ற அளவில் மட்டும் சுருக்கிவிட இயலாது. சாதி, மத, சமூகக் கட்டமைப்பு...

ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி?

‘வானத்தை’ தாங்கள் வணங்கும் தெய்வமாக்கிய ஆரியர்கள், ‘பூமி’யை அடிப்படையாகக் கொண்ட நதிக்கரை நாகரிக மக்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொள்ள பின்பற்றிய தந்திரங்கள் என்ன? ‘ஏகம்-பிரம்மம்’ என்ற தத்துவங்கள் எப்படி வந்தன? விளக்குகிறது இக்கட்டுரை. மனிதர்களைப் பாகுபடுத்தும் சித்தாந்த மாகிய பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அதன் பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கே, வட மேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். இன்று ஈரான், பெர்சியப் பகுதிகளாக அடை யாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள். அவ்வாறு இடம் விட்டு இடம் பெயர்ந்துகொண்டு இருந்ததாலேயே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், வானம் இவற்றில் நிலைமை களில் தொடர்ச்சியாக நிகழும் மாறுபாடுகளை நன்கு அறிந்து வைத்திருந்தவர்கள் அவர்கள். போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவேதான் தங்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி,...

கறுஞ்சட்டை அணிய வேண்டும் ஏன்? பெரியார்

மதுரை கறுஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கறுஞ்சட்டைப் படைக்கு தமிழக அரசு தடை போட்டது. அது குறித்து பெரியார் விடுத்த அறிக்கை: திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கு முன்னால், கறுஞ்சட்டை ஸ்தாபனத் தின் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது என்னும் தடையுத்தரவு குறித்து சில கூற விரும்புகிறேன். நமது மாகாண சர்க்கார், கறுஞ்சட்டை ஸ்தாபனம் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அம்மாதிரி ஸ்தாபனமொன்றும் திராவிடர் கழகத்தின் சார்பாகவோ தனிப்பட்ட தன்மையிலோ இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பொதுக் கூட்டங்களின் போதும், மாநாடுகளின் போதும் தொண்டர்களாயிருந்து பணியாற்ற ஒரு கறுஞ்சட்டைக் கூட்டத்தை ஏற்படுத்துவது நலமென்று கருதி, ஒரு ஏற்பாடு செய்ய வேண்டு மென்று நினைத்து அறிக்கை விட்டோம். அதையொட்டி அக்கூட்டத்தில் இருந்து தொண்டாற்ற விரும்பும் தோழர்களைச் சில கேள்விகள் கேட்டோம். உங்களால் கழகத்துக்கு முழு நேரத்தை தொண்டாற்ற முடியுமா? அல்லது தேவைப்பட்ட நேரத்தில்தான் தொண் டாற்ற முடியுமா? என்று கேட்டோம்....

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து… மதுரை கருஞ்சட்டைப் படை மாநாட்டை எரித்த ‘பார்ப்பன தேசியங்கள்’ கருஞ்சட்டையை அடையாளமாக்க வேண்டும் என்ற கருத்து எங்கே முளைவிட்டது?

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிறப்புரையாற்றினார். எம்.ஆர். ராதாவின் நாடகம் நடந்தது. மாநாட்டையொட்டி திருச்சியில் நடந்த ஊர்வலத்தை திட்டமிட்ட பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்து, வேறு வழியில் போகுமாறு கூறியது. தோழர்கள் கொதித்தெழுந்தனர். பெரியார், தோழர்களிடம், ‘அரசு...

திராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை

திராவிடர் இயக்கத்தின் மூத்த இதழியலாளர்  92ஆம் வயதை எட்டியுள்ள கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், திருச்சி கருஞ்சட்டைப் பேரணி அணி வகுப்பைத் தொடர்ந்து இயக்க வரலாற்றை நினைவுகூர்ந்து ‘நிமிர்வோம்’ இதழுக்கு அனுப்பிய கட்டுரை. சென்ற 23.12.2018 அன்று திருச்சி மாநகரமே குலுங்கும் அளவுக்கு மாபெரும் கருஞ் சட்டைப் பேரணி நடை பெற்றுப் புதிய ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியைப் ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ ஏட்டில் படித்தவுடன் பழைய நிகழ்ச்சி களெல்லாம் எனது நினைவில் நிழலாடின. என்போன்ற பெரியாரின் கொள்கை யுடைய மூத்த தோழர்களெல் லாம் மகிழ்ந்து பெருமைப் படக்கூடிய நிகழ்ச்சி இது. இதேபோல் கருஞ் சட்டைப் படை மாநாடு 1946இல் மதுரையில் நடந்த போது வைத்தியநாத அய்யர் கும்பல் பந்தலுக்கு தீ வைத்தது. வைத்தியநாத அய்யர் காங்கிரசுப் பிரமுகர். அவர்தான் காங்கிரசின் தரம் தாழ்ந்த பேச்சாளரான அணுக்குண்டு அய்யாவு மற்றும் சில அடியாட்களை ஏவிவிட்டு மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தச் செய்தார். மாநாட்டில்...

அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்

‘தலித்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்த மத்திய சமூக நலத் துறை அய்.நா.விலும் தலித் உரிமைகளைப் பேசுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஜாதிய ஒடுக்கு முறை தலித் மீதான வன்முறைகள் குறித்து அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் ‘தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு’ என்ற பெண்கள் அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. தலித் மனித உரிமைகளுக்கான இயக்கம் என்ற அமைப்பின் ஒரு பகுதியாக தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையம் நடத்தும் விவாத அரங்குகளில் பங்கேற்று முதன்முதலாக இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு மற்றும் தலித் மக்கள் மீதான பிரச்சினையை அறிக்கையாக்கி சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்: இந்தியாவில் ‘தலித் பெண்களின் கதை’ என்ற தலைப்பில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு ஜூன் 21ஆம் தேதி ஜெனிவாவில்...

பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள்-சாஸ்திரங்கள்

பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள்-சாஸ்திரங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வேர்கள் – இந்துமதம் கட்டமைத்த சாஸ்திர, புராணங்களில் அடங்கியிருப்பதை, பெரியார் இயக்கம் நீண்டகாலமாக மக்களிடம் எடுத்துச் சொன்னாலும், மார்க்சியர்களின் பார்வை இதில் மாறுபட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. பெண்களை சமூகமாகப் பிரித்துப் பார்ப்பது வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் என்பது அவர்களின் ஒரு பார்வை. பாமர மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் மத புராணங்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது மற்றொரு பார்வை. இப்போது பார்ப்பனிய மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வளர்ந்துவிட்டார்கள். எனவே வரலாறு அணுகுமுறைகளைத் திருத்திக் கெள்ளும் பாதைக்கு நிர்ப்பந்திக்கிறது. இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய பெண்கள் வன்முறைக்கு எதிரான மாநாட்டையொட்டி அக்கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ பெண்ணடிமையை வலியுறுத்தும் சாஸ்திர புராணங்களை கடும விமர்சனத்துக்கு உள்ளாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. இது பாராட்டி வரவேற்கத் தகுந்த மாற்றம்;  அந்தக் கட்டுரையை ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் இந்த ஆணாதிக்க சமூக...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் என தொடர் படுகொலைகளை நடத்திய ‘சனாதன சன்ஸ்தா’வின் பயங்கரவாத பின்னணியை ‘நிமிர்வோம்’ இதழில் படித்தபோது அதிர்ச்சி யடைந்தேன். விரிவாக அம்பலப்படுத்திய ‘நிமிர்வோம்’ இதழைப் பாராட்ட வேண்டும். இவ்வளவு படுகொலைகள் செய்த அமைப்பை தடை செய்யாமல், மதவெறியை எதிர்த்தாலே ‘தேச விரோதிகள்’, ‘அர்பன் கொரில்லாக்கள்’ என்று அரசு அடக்குமுறைச் சட்டங்களை ஏவிவிடுவதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். – செந்தில், வேலூர் பட்டியல் இனப் பிரிவினரில் முதல் முதலாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி பொருளாதார வரம்பை உச்சநீதிமன்றம் திணித்திருப்பதை ‘நிமிர்வோம்’ இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல சமூக நீதித் தலைவர்கள் இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி தீர்ப்பை வரவேற்றார்கள்? – மனோஜ், நாமக்கல் ‘நேர்மைக்கு ஓர் இலக்கணம்’ பெரியார் பற்றிய கட்டுரை அரிய தகவல்களைக் கொண்டிருந்தது. இளைய தலைமுறை  அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளம் இடம் பெற்றிருந்தன. – தென்றல், சென்னை நிமிர்வோம்...

பாரதியின் பார்ப்பனியம்: பெரியார் எழுப்பிய கேள்விகள் செ. கார்கி

‘இந்துத்துவா’ ஒற்றைப் பண்பாட்டைப் பார்ப்பனியம் இந்தியாவின் பண்பாடாக்க முயலுவதும் இந்தியாவின் தேசியக் கவி பாரதி என்ற ஒற்றை மனிதரை உயர்த்திப் பிடிப்பதும் சாராம்சத்தில் ஒன்று தான். பாரதியின் இரட்டை வேடத் துக்குள் பதுங்கி நின்ற பார்ப்பன மேலாண்மையை பெரியார் அம்பலப் படுத்தியதை பெரியார் மொழியிலேயே விளக்குகிறார், கட்டுரையாளர். வழக்கம் போல இந்தாண்டும் பார்ப்பன பாரதியின் பிறந்த தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழக்கம் போல பாரதியின் அருமை பெருமைகளை எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்தனர். பள்ளிகளில் ஒட்டு மீசையும், முண்டாசும் அணிந்து பாரதியார் வேடமிட்ட குழந்தைகள் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒரிரு பாரதியின் பாடல் வரிகளை ஒப்புவித்து பிற்போக்குவாதிகளை திருப்திப் படுத்தினர். இது எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சடங்கு போல தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆகும். எப்படி என்ன காரணத் திற்காக பண்டிகைகள்...

அரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன?

கடவுள் மத மறுப்புக் கொள்கைகளைப் பரப்பும் உரிமையையும் அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் சேர்க்கும்போதுதான்  அரசியல் சட்டம் கூறும் அனைவருக்குமான உரிமை – அர்த்தம் பெறும். இந்தியாவில் 13 சதவீதம் பேர் மத நம்பிக்கையில்லாதவர்கள்; 3 சதவீதம் பேர் நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டிருப் பவர்கள். இது 2012ஆம் ஆண்டு ஒருநிறுவனம் தந்துள்ள புள்ளி விவரம் (றin பயடடரயீ சநயீடிசவ – 2012) உண்மையில் மதவாதிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர் களானாலும் சரி; கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருப் பவர்களானாலும் சரி; அந்த நம்பிக்கை களிலிருந்து முற்றாக விலகிய வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறியீடு மற்றும் சடங்குகளில்தான் இந்த நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நாத்திகர் என்போர் கடவுள் மறுப் பாளர்கள் அல்ல; வேதத்தை மறுப்போர்தான் என்று காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி கூறி யிருக்கிறார். வேதங்கள் தோன்றிய காலத் திலேயே வேத மறுப்பும் – கடவுள் மறுப்பும் தோன்றிவிட்டன. சார்வாகம்,...

மூன்றாம் ஆண்டில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

‘நிமிர்வோம்’ மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எட்டாவது வாசகர் வட்டம் டிச. 16, 2018 அன்று சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் ஆய்வரங்கம்போல் நடந்தது. தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர் தொடக்க உரையாற்றினார். (மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையும் வழங்கி வருகிறார்)  வளர்மதி எழுதிய ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் குறித்து இமானுவேல் துரை  விரிவாக உரை நிகழ்த்தினார். குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம சுப்ரமணியம், சிவகாமி சிதம்பரனார் உரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் குறித்து எட்வின் பிரபாகரன் நூலின் மய்யமான கருத்துகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த மனுஷ்யபுத்திரன் உரையை மய்யமாக வைத்து பெரியாரின் ‘கிராம சீர்திருத்தம்’ நூலோடு ஒப்பிட்டு மதன்குமார் திறனாய்வு செய்தார். யுவராஜ் – க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி...

திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி

டிசம்பர் 23இல் திருச்சியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரண்டு, “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவெறி சக்திகளுக்கு இடமில்லை; தமிழ்நாட்டின் கனிமவள சுரண்டலைத் தடுத்து நிறுத்துவோம்” என்ற எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரியார் இறப்புக்குப் பிறகு பிறந்த பல்லாயிரக்கணக்கான  இளைஞர்களின் போர்ப் பாசறை என்றே கூற வேண்டும். பெரியார் தனது மரண சாசனமாக விட்டுச் சென்ற தமிழின விடுதலையை சூளுரையாக ஏற்றிருக்கிறது இந்தப் பேரணி. விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊடகங்களைத் தவிர, ஏனையவை கட்டுப்பாடாக இந்தப் பேரணியின் செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டன. பெரியார் பேசிய திராவிடம், ‘தமிழரின் இழிவு ஒழிப்பு – தன்னுரிமைக்கான குறியீட்டுச் சொல்’ என்ற உண்மையைத் திரித்து பெரியாரை தமிழருக்கு எதிராக நிறுத்த முயன்ற குழுக்களின் ‘பிரச்சார மாயை’ வெற்றி பெறாது என்று காட்டியிருக்கிறது பேரணியில் திரண்ட இளைஞர்களின் கூட்டம். ஜாதி ஒழிப்பு; ஜாதியின் உற்பத்தி சக்திகளான இந்து மதம்; பார்ப்பனியம்; அதை மூளையில் சுமந்து நிற்கும் ஜாதி...

அறிவியலுக்கு வாருங்கள்! – பெ. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு

அறிவியலுக்கு வாருங்கள்! – பெ. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு

மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல். இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.! – செயின் எக்ஸ்கியூபெரி மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்.. குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் ! சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம். பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் … பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்! தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்… முறைகெட்ட முறைமாமன்களுக்கும்… உறவு விட்டுப் போகுமோயென… விறகுபோல் அள்ளித்தந்து, சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் ! சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை! மணம் எது? மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே! நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே ! கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே! அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.! கலப்பு விஞ்ஞான விதி. கலப்பு இயற்கை நியதி. கலப்பே...

வாசகர்களிடமிருந்து…

திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள்  மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன். – பெ. கார்த்திக், திண்டுக்கல் பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய...

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை உண்மைதான் என போப் பிரான்சிஸ்  ஒப்புக் கொண்டுள்ளார். இதனைக் களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். மதங்களின் மடாலயங்களும், கன்னி மாடங்களும் ‘கலவிக் கூடங்கள்’ ஆகிவிட்டன! மதவெறி தகர்த்து மனித நேயம் காப்போம்! நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது… சமீபத்திய ஆய்வு முடிவுகள்

கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. ழடிற ளுநஉரடயச குயஅடைல ஏயடரநள ளுவயஉம ரயீ என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் (ஞாடை ஷ்ரஉமநசஅயn) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்கா வின் ஞவைணநச  கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார். 2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவதில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப் படும்...

பெரியார் கவலைப்பட்டது ஏன்?

எனக்கு 40ஆவது வயதில் நாக்கில் புற்று வந்தது. நண்பர் டாக்டர் திரு. முத்துசாமி அவர்கள் என்னிடம் உண்மையினைச் சொல்லாமல் ஏதோ மருந்தினை தடவி துடைத்தே வந்தார். அவரின் ஆலோசனைப்படி சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனத்திடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘அடச் சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும்?’ என்றார். ‘என்ன அய்யா நோய்?’ என்றேன். நான் பயந்து கொள்ளுவேன் என்று கருதி, ‘ஒன்றுமில்லை’ என்று கூறி வேறு ஒரு டாக்டருக்குக் கடிதம் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு, ‘எத்தனை நாளாய் இப்படி இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘அது ஒரு மாதத்துக்கு மேலாகவே இருக்கிறது’ என்றேன். ‘என்ன அய்யா இப்படி விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசாமலே இருக்கலாமா?’ என்று கோபித்துக் கொண்டார். ‘மன்னிக்கணும். என்ன நோய் என்கிறீர்கள்?’ என்றேன். அவர் அதற்குள்ளாக தம்மை சரிப்படுத்திக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை, புற்றுநோய், என்றாலும் சரியாகிவிடும்’ என்று கூறி சிகிச்சை செய்தார். பிறகு சரியாகி விட்டது. நான்...

பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000 கோடி

பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் பார்ப்பன அதிகார வர்க்கம்  ரூ.  70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த  மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி. பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம்...

மோடி பூமியின் காவலரா?

நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘பூமியின் சாம்பியன்’ விருதை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சுற்றுச்சூழல் முன்னேற்றத் துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படுவது இந்த உயரிய விருது. சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட சூழல் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதற் காகவும், மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதாக அறிவித்துள்ளதாலும் இந்த விருது. இதைப் பெறும் அளவுக்கு மோடி தகுதியானவரா? கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வாங்குவதில் மாற்றம் கொண்டு வந்தார். ஒரு பெரிய தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்பாக, அது அமைய இருக்கும் இடத்தில் அதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பாதிப்புகளும் ஏற்படாது என்பதைச் சூழலியல் துறை உறுதிசெய்ய வேண்டும். முன்பு இதற்கான கால அவகாசம் 600 நாட்களாக இருந்தது. மோடி அரசு இதை 170 நாள்களாகக் குறைத்தது....

அந்த வசந்தம் அண்ணா

அண்ணா முதலமைச்சரான பிறகு ‘விடுதலை’ வெளியிட்ட பெரியார் 80ஆவது பிறந்த நாள் மலருக்காக அண்ணா எழுதிய கட்டுரை இது. கட்டுரைக்கு ‘அந்த வசந்தம்’ என்று அண்ணாவே தலைப்பிட்டார். பெரியாரின் வரலாற்றுச் சாதனைகளை கூர்மையாகப் படம் பிடிக்கும் கட்டுரை. எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு – ஆண்டு பலவற்றுக்குப் பிறகு – அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப் பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும். வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன். அப்போது, கலவரம் எழாமல்...

வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் அறிவாயுதம்

அண்ணாவின் பகுத்தறிவு – பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனைகளின் தொகுப்பு இது. ஆழமான கேள்விக் கணைகளால் வைதீகத்தை அண்ணா எப்படி துளைத்தெடுத்திருக்கிறார் என்பதற்கு இந்த எழுத்துகளே சாட்சியங்கள். இலட்சார்ச்சனை : நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்க சேத்திரத்தில் சிறீரங்க நாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி? இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின்...

பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்

1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் – பெரியார் அறிக்கை: ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ...

“தேவை மானமும் மரியாதையும்; சோறு அல்ல!”

அடிமை வகுப்பினர் சார்பில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியாவில், ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையிலும், ஒரு சமூக அமைப்பு என்ற முறையிலும் பார்ப்பனியம் அடியோடு ஒழித்து கட்டப்பட வேண்டும்; ஆழக் குழித் தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை. இதைத் தவிர, சமூக மேம்பாடு குறித்து அவர்களுக்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்று துணிந்து கூறுவேன். நேர்மையற்ற, கொடிய, நச்சுத்தனமான சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் அவமதிப்பு, அவமரியாதை, ஏளனம், இகழ்ச்சி, நிந்தை, பரிகாசம் இவற்றுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய வறுமையும் இல்லாமையும் அத்தனை ஒன்றும் பெரிதல்ல. அவர்களுக்கு வேண்டியது மானமும் மரியாதையுமே தவிர, சோறு அல்ல. – டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 9- பக்கம் 211 நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

‘தர’த்தின் பெயரால் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இப்போது ‘சாரத்தை’ சிதைக்கிறார்கள் இரா. மன்னர் மன்னன்

‘தர’த்தின் பெயரால் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இப்போது ‘சாரத்தை’ சிதைக்கிறார்கள் இரா. மன்னர் மன்னன்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் வெற்றி பெற்று தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. நாடாளு மன்றத்தில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போது அதன் நோக்கம் என்ன என்றெல்லாம் பார்க்காமல், அதனால் பலன் அடையக் கூடியவர்கள் யார்? – என்று மட்டும் பார்த்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்களோ என்ற கேள்வியை இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவின் வெற்றிஎழுப்பி உள்ளது. பொருளாதார ரீதியிலான இட இதுக்கீடு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும், முன்னர் இது போன்ற நடவடிக்கையை நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட போது அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து இருந்தார்களா அல்லது அறியாதது போல காட்டிக் கொண்டார்களா எனத் தெரியவில்லை. இந்த மசோதாவின் மிகப் பெரிய அதிர்ச்சி களில் ஒன்று அதில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறை, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும்...

திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல் கவிஞர் வைரமுத்து

திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல் கவிஞர் வைரமுத்து

பிறப்புமுறை – ஒலிப்புமுறை – அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றென்பதும் அது சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தரணிக்கு மட்டுமன்று தமிழர்க்கும் கால்டுவெல்லே உணர்த்தினார்.   ஓர் அதிசயம் 1814இல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பௌதிகப் பெயர் கால்டுவெல். அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது: “1856இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற – எவராலும் பின்...

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

1968 டிசம்பர் 25ஆம் நாள் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில்  44 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொடூரமான குருதி படிந்த  வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக் கொண்டு வருகிறது, இத் தொடர். ஒரு முன்னுரையாக: 1989-90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜீவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின மக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதில் மிகக்கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. என்னுடைய எழுத்துக்கள் எதுவும் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்கு உட்பட்டது தான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறு களையும், காழ்ப்புணர்ச்சிகளையும், அழிச்சாட்டியமான விதண்டாவாதங்களையும் கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் அறிவு நாணயம் என்று விளங்கவில்லை. காரல் மார்க்ஸ் தன்னை, தன்னுடைய சித்தாந்தத்தை ‘சர்வரோக நிவாரணி’ என்று...

அண்ணா தந்த அறிவாயுதங்கள்

அண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் – இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூகநீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2019 இதழ்

தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 பெரியார் முழக்கம் 28022019 இதழ்