Tagged: ஸ்டாலின்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலைஞர் இல்லம் சென்று நலம் விசாரித்தனர்

தமிழினத்தின் மூத்த தலைவர் கலைஞர் உடல் நலம் விசாரிக்க கழகத் தலைவர் பொதுச் செயலாளர் ஜன. 2ஆம் தேதி, பகல் 11 மணியளவில் கலைஞரின் இல்லமான கோபாலபுரம் சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, இராசா, எ.வ. வேலு, மருத்துவர் எழிலன் ஆகியோர் உடனிருந்தனர். கழகத்தின் வெளியீடுகள் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டன. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், செயலவை உறுப்பினர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடன் சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 05012017 இதழ்

திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !

பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில் கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு, கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ! ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர்...