Tagged: வாழ்க்கை இணையேற்பு

புதுவை – வீதி நாடகக் கலைஞர்கள் மதிவதணன் – அஸ்வினி வாழ்க்கை இணையேற்பு

26062016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை, அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணீயாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழாவிளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த்தந்தத்தை நிறைவேற்றிவைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர். வாழ்க்கை ஒப்பந்தவிழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் எறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பரை அடித்தது குறிப்பிடத் தக்கது. விழாவை விரட்டு வீதிநாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்த்...

தோழர் மலைக்கொழுந்தன் – கோமதி வாழ்க்கைக் துணைநல ஒப்பந்தம்

16062016 அன்று கரூர், தாந்தோன்றிமலை, திருமணமண்டபத்தில், பட்டதாரி ஆசிரியர்களான தோழர் ஆ.மலைக்கொழுந்தன், பா.கோமதி ஆகியோரின் விருப்ப வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தம் கழகத் தலைவர் கொளத்துர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கழக மாவட்டத் தலைவர் பாபு (எ) முகமது அலி, த.பெ.தி.க மாவட்டத் தலிவர் தனபால், குளித்தலை கழகத் தலைவர் சத்தியசீலன், கொடுமுடி பாண்டியன் உட்பட Pஅலர் கல்ந்துகொண்டனர். தோழர் மலைக்கொழுந்தன் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். மணவிழா மகிழ்வாக கழக ஏடான பெரியார் முழக்கத்துக்கு ரூ 2,000 நன்கொடை வழங்கினார்.

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் குமரேசன்-தரணி, ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு நிகழ்வு காதலர் நாளான பிப்.14 அன்று மாலை 7 மணியளவில் இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தோழர் குமரேசன், கழகத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். கழக மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்ற, தபசி. குமரன், வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 03032016 இதழ்