Tagged: மாநாட்டு தீர்மானங்கள்

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள் தடுத்து நிறுத்த கழகம் களமிறங்கும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 12.8.2016 அன்று மாலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம்’ நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதைப் போலவே அதன் 51ஏ பிரிவின்படி அடிப்படை கடமைகளையும் வரையறுத்துள்ளது. அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்பதை குடிமக்கள் அனைவரின் அடிப்படை கடமை என்று உள்பிரிவு ‘எச்’ (h) வலியுறுத்துகின்றது. இதனை வலியுறுத்தியே “நம்புங்கள் அறிவியலை! நம்பாதீர்கள் சாமியார்களை!” எனும் முழக்கத்தோடு அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் திராவிடர் விடுதலைக் கழகம் மக்களின் பெரு வரவேற்போடும், ஆதரவோடும் நடத்தி முடித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் இப்பயணங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கியும் வந்த சிறு இடையூறுகளைக்...

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...