Tagged: மாட்டிறைச்சி தடை

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017

மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மாட்டிறைச்சி தடைச் சட்டம் – திவிக ஈரோடு தெற்கு கண்டனக் வட்டம் 28052017

பாஜக மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28052017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கப்பட்டது. தோழர் ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்க..சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)வெங்கட்,  ப.ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர்,  இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ்,  கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.!

பாஜகவின் மாட்டிறைச்சி தடைச் சட்டம் – கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ! பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசு மாடு மட்டுமல்லகாளை,எருமை,கன்றுக்குட்டி, கறைவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்க்கக்கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம்,விவசாயி என்பதற்கான அடையாள சான்றுபௌள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம்.இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர்...