Tagged: மருத்துவ நுழைவுத் தேர்வு

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

மருத்துவ கல்வியில் பறிபோகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் – அலசல்

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமியை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம்.. அதற்கு பிறக்கும் அது போன்ற செய்திகள் வந்திப்பதாகவே நினைவு.. அவர்கள் ஏன் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர வேண்டும்?.. இந்தியாவின் ஹைடெக் நகரங்களான மும்பை டெல்லி பெங்களூர் போன்றவற்றை எல்லாம் விட்டு விட்டு.. என்பதில்தான் மருத்துவத்தில் தமிழகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது புரியும்.. மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. திராவிடத்தால் வாழ்ந்தவர்களுக்கு கொஞ்சம் களுக்குன்னு இருக்கும் பேரவால்ல, விஷயம் அதுவல்ல மேல சொன்ன பெருமைகள் நம்மை விட்டு போக போகின்றன.. நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.. இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.. நியாயந்தானேன்னு நம்மாளு வக்கணையா பேசுவான். உள்ளே இருக்கும் சாதிகளை புரிஞ்சுக்காம.. தமிழகத்தில் தான் அரசு மருத்துவ...

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர முயற்ச்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டத்தை கைவிட கோரியும் 07.07.2016 அன்று சென்னையில் தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தோழமை அமைப்பு மாணவர் தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர் புரம் தனியார் திருமண மண்டபத்தில் தோழர்கள் வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.