Tagged: பெரியார் 137வது பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 137 வது பிறந்த நாள் விழா ஊர்வலம் கொடியேற்று விழா ! பல்லடத்தில் கொடியேற்றும் இடங்கள் : 1)தெற்குப்பாளையம் 2)மணி மண்டபம். 3)வடுகபாளையம் 4)அனுப்பட்டி 5)லட்சுமி மில். 6)செட்டிபாளையம் பிரிவு. 7)மாணிக்காபுரம் சாலை. 8)N.G.R..ரோடு. 9)காவல்நிலையம் எதிரில் 10)பேருந்து நிலையம். பல்லடத்தில் 25.10.2015 ஞாயிற்றுகிழமை அன்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்த நாள் விழா வாகன ஊர்வலம், கொடியேற்று விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர்வலம் காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்லடம் தெற்குப்பாளையம் பகுதியில் துவங்கியது.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் துவக்கவுரை நிகழ்தினார்.பல்லட நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தெற்குப்பாளையம் பகுதியில் கொடியை ஏற்றிவைத்தார். பறை இசை முழக்கத்துடன் எழுச்சியுடன் ஊர்வலம்...
தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக...
தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேஷ்குமார், அமைப்பாளர் தெள்ளமிழ்து மற்றும் திராவிட விடுதலைக் கழக தோழர்கள், தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை விளக்கி பேருந்து நிலையம், அங்காடிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கை படித்து தோழர்களிடம் விளக்கம் கேட்டனர். பின்பு மாலை தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் பேரணியில் கலந்துகொண்டனர்.