குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி
2013 செப்டம்பர் 18 அன்று கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. எஷான் ஜஃரியின் மனைவி திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம். அதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்: 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் – அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக...