Tagged: பெயர் சூட்டல்

இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில் சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற சமூகநீதி காத்தவன் இராவணன் எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு “இராவணன்” திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணி – பிரியா இணையரின் ஆண் குழந்தைக்கு ‘இராவணன்’ என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். பெரியார் முழக்கம் 17082017 இதழ்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘துருளுகூஐஊநு’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகி யிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், தானும்...

நன்கொடை

நன்கொடை

சாதி மறுப்பு, தன் விருப்ப (காதல்)த் திருமண இணையர் அ.இரா. தமிழமுதன்-வெ.ரெ. இறையரசி ஆகியோருக்குப் பிறந்த (6.12.2015) ஆண் குழந்தைக்கு ‘இசை’ எனப் பெயரிட்டதன் மகிழ்வாக ரூ.1000/- ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வழங்கியுள்ளார். அ.இரா. தமிழமுதன், ‘நாளை விடியும்’ இதழ் ஆசிரியர் பி.இரெ. அரசெழிலன்-அனுராதா இணையரின் மகன் ஆவார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 17122015 இதழ்

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...